பெருந்தொற்று.. ஒலிம்பிக் போட்டி நடத்தினால் கொரோனாதான் தங்கம் வெல்லும்.. நிபுணர்கள் வார்னிங்
டெல்லி: கொரோனா பெருந்தொற்றுக்கிடையே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவதால் கொரோனா வைரஸ் தங்கம் வென்றாலும் வெல்லலாம் என மருத்துவ நிபுணர்கள் கவலைத் தெரிவிக்கிறார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனாவால் இந்த ஆண்டு நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் இந்த போட்டிகளில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் தென்னாப்பிரிக்கா ஆடவர் கால்பந்து அணியில் தாபிசோ மோன்யானி, கமொஹெலோ மலாஸ்தி, உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியானது.

கமிட்டி
சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கமிட்டியானது கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கவில்லை. அதை விருப்பத் தேர்வாகவே விட்டுள்ளது. இது குறித்து நிபுணர்கள் எச்சரித்தும் எந்தவித பயனும் இல்லை. மருத்துவக் குழுவில் உள்ள அமெரிக்க நிபுணர்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் இதெல்லாம் வெறும் பேச்சுத்தான் செயலில் ஒன்றுமில்லை என்றார்.

பயிற்சியாளர்கள்
போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்புகள் குறித்து 70 பக்க ஆவணம் வெளியிடப்பட்டுள்ளதாக கமிட்டி சொல்கிறது. 200 நாடுகளுக்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து 11,000 வீரர்கள் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

முட்டாள்தனம்
சில போட்டிகள் ஒருவருக்கு ஒருவர் உடல்ரீதியாக தொடும் வகையில் உள்ளது. இதுகுறித்து நியூயார்க் பல்கலையின் பயோ எதிக்ஸ் பேராசிரியர் ஆர்தர் கப்லான் கூறுகையில் உலகம் முழுவதிலிருந்து வீரர்கள் வந்து ஆட வேண்டும், ஆனால் கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என்பது முட்டாள்தனமாகும்.

ஒலிம்பிக்
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னால் ஏன் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று கேட்கிறேன். மொத்தத்தில் நிபுணர்கள் குழு ஐ.ஓ.சி. மீது கடும் விமர்சனங்களை வைத்து ஒலிம்பிக் போட்டிகளில் கோவிட் தான் தங்கம் வெல்லும் போலும் என்று எச்சரித்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications