ஹோட்டலில் ரூம் போட்ட ஜோடி.. வெறும் 4 மணி நேரம் கேட்டாங்களாம்.. "அறை எண் 302" பெட் ரூமில்.. அட ஆண்டவா
டெல்லி: 2 குழந்தைகளையும் தவிக்கவிட்டு, கள்ளக்காதலனை தேடி வந்துவிட்டார் அந்த பெண்.. இதனால் 2 குடும்பத்தினருமே அதிர்ந்துபோய் நிற்கிறார்கள்.
டெல்லி மவுஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ளது அந்த ஹோட்டல்.. ஒரு இளம் ஜோடி, இரவு நேரத்தில் அந்த ஹோட்டலுக்கு வந்திருக்கிறார்கள்.. வெறும் 4 மணி நேரத்துக்கு மட்டும் தங்களுக்கு ரூம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஓட்டல் ரூம்: அதன்படியே ரூம் ஒதுக்கித்தரப்பட்டுள்ளது.. ஆனால், 4 மணி நேரம் கழித்து அவர்கள் வெளியே வரவேயில்லை. அதனால் நீண்ட நேரம் காத்திருந்தனர்.. ஆனாலும், நள்ளிரவையும் தாண்டியும் அவர்கள் வெளியே வரவில்லை. எனவே, ஹோட்டல் ஊழியர்கள் ரூம் கததவை தட்டிப்பார்த்தனர்.. எந்த சத்தமும் கேட்கவில்லை.
எனவே, ஹோட்டல் நிர்வாகத்தினர் சந்தேகமடைந்து, ஜாஃப்ராபாத் போலீசுக்கு தகவல் தந்தார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து, ஹோட்டலில் உள்ள ஸ்பேர் சாவி மூலம், கதவை திறந்துகொண்டு உள்ளே போனார்கள்.. அங்கே அந்த ஜோடி பிணமாக கிடந்தது.. அந்த நபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. அந்த பெண், படுக்கையிலேயே சடலமாக கிடந்தார். அருகிலேயே ஒரு லெட்டர் எழுதி வைத்திருந்ததையும் போலீசார் கைப்பற்றினர்.
கடிதம்: அதில், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்.. வாழ்க்கையில் ஒன்று சேர முடியவில்லை. அதனால், மரணத்தில் ஒன்று சேர்கிறோம்" என்று எழுதியிருந்தது.
அதற்கு பிறகு, அந்த ஜோடி யார் என்ற விசாரணையை போலீசார் கையிலெடுத்தனர்.. இவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள்.. உயிரிழந்த நபரின் பெயர் சோராப்.. 28 வயதாகிறது.. அந்த பெண்ணின் பெயர் ஆயிஷா.. 27 வயதாகிறதாம்.. ஆனால், முகமது குல்பாம் என்பவருடன் கல்யாணமாகி, 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.. மகனுக்கு 9 வயது, மகளுக்கு 4 வயதாகிறதாம். இவரது கணவர் உடற்பயிற்சி உபகரணங்களை விற்பவராம்.
தற்கொலை: எனினும், இருவருமே நீண்ட காலமாகவே கள்ளக்காதலில் இருந்துள்ளனர்.. ஒருவரையொருவர் பிரிந்து வாழ முடியாத சூழலில், இந்த தற்கொலை முடிவுக்கு வந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இநத் மரணம் குறித்து, ஆயிஷா மற்றும் சோராப்பின் குடும்பத்தினரிடம் விசாரணை நடக்கிறது.. உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லியில் ரூம் போட்டு தற்கொலை செய்துள்ளது, தலைநகரில் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.
சோராப் மீரட்டைச் சேர்ந்தவர்.. ஆயிஷா லோனியைச் சேர்ந்தவர். அந்த ஓட்டலில் 3வது மாடியில், 302-ம் ரூமில்தான் இவர்கள் தங்கியிருக்கிறார்கள்.. 4 மணி நேரம் முடிந்து, இரவு 7 மணிக்குள் ரூம் காலி செய்திருக்க வேண்டுமாம்.. அதனால் இரவு 7.45 மணிக்கு ரூம் கதவை ஓட்டல் ஊழியர்கள் தட்டிப்பார்த்துள்ளனர்.. அதற்கு பிறகுதான் சந்தேகம் வந்து போலீசுக்கு சென்றுள்ளனர். ஆயிஷாவின் கழுத்தில் சில தசைநார் அடையாளங்கள் இருந்ததாக போலீசார் சொல்கிறார்கள்.
சந்தேகங்கள்: சோராபின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முயற்சிகள் நடந்து வருகின்றன.. இவர், ஷம்ஷீரின் என்பவரின் மகன் என்பதை மட்டும் தற்சமயம் கண்டுபிடித்துள்ளனர்.. இந்த மரணம், பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளதால், அனைத்து கோணங்களிலுமே போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications