எலும்புக்கூடா சிதைஞ்சு போச்சே.. வெந்துபோன உடல்கள்.. கருகிய பெட்டிகள்.. இந்தியாவின் இதயமே நடுநடுங்குதே
டெல்லி: ஒடிஷாவில் நடந்த ரயில் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னும் நாட்டு மக்கள் மீளவில்லை.. இதனிடையே, விபத்து பகுதியின் காட்சிகளை இணையத்தில் பார்த்து, வெலவெலத்து போயுள்ளனர்.
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துக்களில் மிகப்பெரிய ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது.. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் 1200 பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 12000 வீரர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்..

மீட்பு பணிகள்: இப்போதைக்கு மீட்பு பணிகள் முடிந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் சொல்கிறது.. ஆனாலும், ஒவ்வொரு பகுதியிலும் மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்..
அந்த ஒவ்வொரு இடங்களிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே அடுத்த இடங்களில் பணியை துவங்குகிறார்கள்.. எப்படியும் இந்த பணிகளை முடிக்க இன்னும் 4 மணி நேரங்கள் ஆகும் என்கிறார்கள்.. அந்தவகையில், இன்று மாலை மீட்பு பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, விபத்து நடந்த பகுதிகளின் வீடியோக்களும், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி பதற செய்து வருகின்றன.. அந்த பகுதியை பார்க்கும்போது, மொத்தமாகவே தரையிறங்கி இருப்பது போல தென்படுகிறது.. 3 ரயில்களும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டும், இடித்துக் கொண்டும் கிடக்கின்றன.. ரயில் பெட்டிகள் அந்தரத்தில் தொங்கி கிடக்கின்றன.. மேலும் சில ரயில் பெட்டிகள், தலைகீழாக திரும்பி தொங்கி கொண்டிருக்கின்றன.
சின்னாபின்னம்: உயிரிழந்தவர்களின் சடலங்கள் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டு, வரிசையாக படுக்க வைக்கப்பட்டிருக்கின்றன.. கடும்புயல் நேரத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை போல, ரயில்வே தண்டவாளங்கள் சின்னாபின்னமாகி கிடக்கின்றன.. சில ரயில் பெட்டிகள் அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்புக்கூடாய் கருகி காட்சி அளிக்கிறது.. சில ரயில் பெட்டிகள் இரும்பு கூழாக உறைந்து காட்சியளிக்கின்றன.

சூறாவளியால் சூறையாடப்பட்டதைப்போல ரயில் பெட்டிகள் தூக்கி ஆங்காங்கே வீசப்பட்டுள்ளதை அந்த காட்சிகளில் பார்க்க முடிகிறது.. மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், எரிவாயு மூலம் வெட்டும் கருவிகளைக் கொண்டு, நசுங்கிய ரயில் பெட்டிகளை அறுக்கிறார்கள்.. சிலர் உடைத்தெறிகிறார்கள்.. அதற்கு பிறகு, உள்ளே நுழைந்து, யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பதை தேடி வருவதை காண முடிகிறது..
பதற்றம்: விபத்து பகுதி முழுவதுமே, மீட்பு படையினர் பதற்றத்துடன் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.. மற்றொரு பக்கம் ஆம்புலன்ஸ்களின் சப்தம் அந்த பகுதியில் உலுக்கி எடுக்கிறது.. ரயில்பெட்டிகளை அறுக்கும் சப்தமும், ஆம்புலன்ஸ்களின் சைலன் ஒலியும், போலீசின் விசில் சப்தமும், மாறி மாறி எதிரொலித்து கொண்டேயிருக்கிறது..இதில் எந்த சத்தத்தை கேட்டாலும், நெஞ்சத்தை துளைத்து செல்வது போலவே உணர முடிகிறது.

ரயில்வே தண்டவாளங்களில் சிதறியும், சிந்தியும், உறைந்தும் கிடக்கும் மனித ரத்தங்கள், காண்போரின் இதயத்தை கலங்கடிக்க வைத்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications