வெப்ப காற்று தாக்க போகிறது.. மிக கடுமையாக இருக்கும்.. கவனம்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

இந்தியாவில் இன்று தென் இந்தியா உட்பட பல பகுதிகளில் மிக கடுமையான வெப்பநிலை இருக்கும், வெப்ப காற்று மிக கடுமையாக வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இன்று தென் இந்தியா உட்பட பல பகுதிகளில் மிக கடுமையான வெப்பநிலை இருக்கும், வெப்ப காற்று மிக கடுமையாக வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Tamilnadu Weatherman | Hot Weather In Tamilnadu | Reason

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஆம்பன் புயல் தாக்கியது. இந்த புயல் காரணமாக அங்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டது. இந்த புயலால் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரும் தறைகாற்று காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மிகவும் வெப்பமான வானிலை நிலவி வருகிறது.

    வெயில்

    வெயில்

    இந்த நிலையில் இந்தியாவில் இன்று தென் இந்தியா உட்பட பல பகுதிகளில் மிக கடுமையான வெப்பநிலை இருக்கும், வெப்ப காற்று மிக கடுமையாக வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். பல இடங்களில் வெப்ப காற்று வீச வாய்ப்புள்ளது. மக்கள் இதனால் கவனமாக இருக்க வேண்டும்.

    எங்கு எல்லாம்

    எங்கு எல்லாம்

    முக்கியமாக மத்திய இந்தியா, தென் இந்தியாவில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். மேற்கு இந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும் சனிக்கிழமையை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும். பல மாவட்டங்களில் 42-42 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நிலவும். சில இடங்களில் 45-46 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை நிலவும். ராஜஸ்தானில்தான் அதிகமாக வெப்பநிலை நிலவும்.

    தமிழகம் எப்படி

    தமிழகம் எப்படி

    ராஜஸ்தானில் 46.6 டிகிரி செல்ஸியஸ் சனிக்கிழமை பதிவானது. இதேபோல் இன்றும் வெப்பநிலை பதிவாகும். தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை தாண்ட வாய்ப்புள்ளது. ஆம்பன் புயல் காரணமாக ஏற்பட்ட சுழற்சி காரணமாக சூடான தரைக்காற்று இந்த பகுதிகளுக்கு வரும்.

    மழை குறையும்

    மழை குறையும்

    இதனால் மழை குறையும். இதனால் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகமாக உள்ளது. தென்னிந்தியாவில் வெப்பநிலை அதிகரிக்க இது முக்கிய காரணம். இந்த வெப்ப காற்று காரணமாக 4-6 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, டெல்லி இதனால் மோசமாக பாதிக்கப்படலாம். பகல் நேரத்தில் மக்கள் இதனால் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+