ஓ பட்டர்பிளை.. சிறகுகளை மூடினால்.. காய்ந்து போன இலையாக மாறி ஆக்ட் கொடுக்கும் பட்டாம்பூச்சி!
டெல்லி: பட்டாம்பூச்சி ஒன்று அதன் சிறகுகளை மூடிக் கொண்டால் வாடி போன இலை போன்று தோற்றமளிக்கும். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இயற்கை எப்போதுமே நம்மை கிறங்கடிப்பதை தவறுவதில்லை. அதிலும் அழகிற்கும் எந்த குறைவும் இல்லை. பட்டாம்பூச்சிகளை கேட்கவே வேண்டாம். அழகிற்கு பெரும்பாலும் கவிஞர்கள் ஒப்பிடுவது இந்த பட்டாம்பூச்சிகளைத்தான்.
அந்த பட்டாம்பூச்சிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் பிடித்து அதன் அழகை ரசிப்பர். இந்த பூச்சிகள் பல்வேறு கண்கவர் நிறங்களில் தோற்றமளிக்கிறது.

பறவை
இந்த நிலையில் வனத்துறை அதிகாரி ஒருவர் ஒரு வித்தியாசமான பட்டாம்பூச்சியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு 40 ஆயிரம் வியூக்கள் கிடைத்தன. அந்த ட்வீட்டில் ட்ரோபிக்கல் ஆசியாவில் கிடைக்கும் டெட் லீஃப் பட்டாம்பூசியை பாருங்கள். ஏதாவது பறவையோ அல்லது வேறு ஏதேனும் அதன் அருகில் வந்துவிட்டால், உடனே காய்ந்த இலை போன்று நடிக்கும்.

கொண்டாட்டம்
அது போல் தனக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்தால் உடனே சிறகுகளை மூடி காய்ந்த இலைகளை போன்று தோற்றமளிக்கும். இதை ட்விட்டர்வாசிகள் கொண்டாடி வருகிறார்கள். இதுபோன்ற பட்டாம்பூச்சியை நான் பார்த்ததே இல்லை என்கிறார்கள். மிகவும் புத்திசாலித்தனமானது என நெட்டிசன்கள் தெரிவித்தார்கள்.

ஏமாற்றுவித்தை
இது உண்மையில் பட்டாம்பூச்சி அல்ல. ஏமாற்று வித்தை காட்டுவதாக உள்ளது என்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்க்கும் சிலர் ஸ்தம்பித்து போகிறார்கள். இது மிகவும் அற்புதமான ஒன்று என்கிறார் நெட்டிசன் ஒருவர். ஆனால் இது நிறத்தை மாற்றும் பச்சோந்தி இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.

பூச்சியினம்
டெட் லீஃப் பட்டர்பிளைக்கள் என்பது ஒரு வகை பூச்சியினத்தை சேர்ந்தது. அது தனது இறகுகளை மூடினால் காய்ந்து போன இலையை போன்று தோற்றமிருக்கும். வெளிப்புறம் மட்டுமே காய்ந்து போனது போல் இருக்கும். ஆனால் உள்ளே பார்த்தால் மிகவும் கலர்ஃபுல்லாக இருக்கும்.












Click it and Unblock the Notifications