2023-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்! நள்ளிரவு 11.31 மணி முதல் இன்று அதிகாலை 3.56 மணி வரை நீடித்தது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2023-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணமானது நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 11.31 மணி முதல் இன்று அதிகாலை 3.56 மணி வரை நீடித்தது. அதிகாலை 1.44 மணிக்கு சந்திர கிரகணத்தை முழுமையாக இந்தியாவில் பார்க்க முடிந்தது.

சந்திர கிரகணம் என்பது பெளர்ணமி நாளில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் இருப்பதுதான் சந்திர கிரகணம். சந்திர கிரகணம் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை நிகழும். சந்திர கிரகணம் 3 வகைப்படும். அவை முழு சந்திர கிரகணம்; பகுதி கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம்.

 Here Visuals of Partial lunar eclipse in India

இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 8-ல் சந்திர கிரகணம் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 11.31 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3.56 மணி வரை சந்திர கிரகணம் நீடித்தது.

டெல்லியில் அதிகாலை 1.05 மணிக்கு நன்றாக சந்திர கிரகணத்தை பார்க்க முடிந்தது. அதிகாலை 1.44 மணிக்கு முழுமையாக சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கவும் முடிந்தது.

சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பார்க்கக் கூடியதாக இருந்தது. இதுதான் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணமாகும்.

பூமியின் கீழே உள்ள நிழலில் மறையும் போது ஏற்படுவது முழு சந்திர கிரகணம். பூமியின் மேலே உள்ள நிழலில் மறையும் போது ஏற்படுவது பகுதி சந்திர கிரகணம். பகுதி கிரகண நேரத்தில் பூமியின் நிழல் சந்திரனின் பக்கம் விழுவதால் கும்மிருட்டாக இருந்தது. சந்திர கிரகணங்களை வெறும் கண்களாலும் தொலைநோக்கி, பைனாகுலராலும் பார்க்க முடிந்தது.இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் 2024-ம் ஆண்டு ஆண்டு செப்டம்பர் 7-ல் தெரியும். இது முழுமையான சந்திர கிரகணமாக இருக்குமாம்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று பகல் முதலே கோவில்கள் மூடப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை நேற்று இரவு 7.05 மணிக்கு சாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி கோவில் மூடப்பட்டிருந்தது. பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் நடை திறக்கப்பட்டது. இதேபோல பல்வேறு கோவில்களில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. ஜோதிடர்களின் அறிவுரைப்படி பொதுமக்கள் பலரும் பரிகார பூஜைகளையும் நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+