டவ்தே புயலால்.. தாழ்வான இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம்.. எந்த மாநிலங்களுக்கு ஆபத்து அதிகம்
டெல்லி: டவ்தே புயல் காரணமாகக் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், தென் தமிழகம் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
Recommended Video
அரபிக் கடலில் உருவாகியுள்ள அதி தீவிர 'டவ்தே' புயல் காரணமாகத் தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த டவ்-தே புயலானது இப்போது மும்பையிலிருந்து தென்மேற்கே 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் 19 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையமும் இந்திய வானிலை ஆய்வு மையமும் இணைந்து டவ்தே புயல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குஜராத்தின் போர்பந்தர், அம்ரேலி ஜுனாகர் மற்றும் அகமதாபாத்தின் கடலோரப் பகுதிகளில்இந்தப் புயலால் சேதம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக உப்பு உற்பத்தி செய்யும் இடங்கள் பயிர்கள் மோசமாகப் பாதிக்கப்படலாம். அதேபோல சிறிய படகுகள், நாட்டுப் படகுகளும் பாதிப்பிற்கு உள்ளாகலாம். மீனவர்கள் கண்டிப்பாகக் கடலுக்குச் செல்லக் கூடாது.
அதேபோல கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவு வரை 3.5 மீட்டர் முதல் 6.6 மீட்டர் வரையிலான உயரத்தில் அலைகள் எழும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதேபோல கடலோர பகுதிகளிலும் அதி தீவிரமாகக் காற்று வீசும் அபாயம் உள்ளது. எனவே, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், தென் தமிழகம் ஆகிய பகுதிகள் இந்த புயலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications