24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் இந்தியாவில் 147 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மொத்தம் 1,31,868, ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 3867 ஆக உயர்ந்துள்ளது.

50 ஆயிரத்தை நெருங்கியது

50 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 47190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனாவால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 1577 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13404 ஆக உள்ளது.

தமிழக பாதிப்பு நிலவரம்

தமிழக பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்து இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 15,512 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 7491. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் 100ஐ தாண்டியுள்ளது. மொத்தம் 103 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மரணங்களில் 2-வது இடத்தில் குஜராத்

மரணங்களில் 2-வது இடத்தில் குஜராத்

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் குஜராத் 3-வது இடத்தில் உள்ளது. ஆனால் கொரோனா மரணங்களில் குஜராத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13664 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 829ஆகவும் உள்ளது. ராஜஸ்தானில் 6742 பேரும் மத்திய பிரதேசத்தில் 6371 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

Recommended Video

    தடுப்பூசி இல்லாமல் இந்தியா கொரோனாவை ஒழிக்க முடியும் - WHO விஞ்ஞானி
    மே. வங்கம், கேரளா

    மே. வங்கம், கேரளா

    மேற்கு வங்கத்தில் கொரோனா மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன. கொரோனாவால் மேற்கு வங்கத்தில் 269 பேர் உயிரிழந்துள்ளனர். 3459 பேர் இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களால் கேரளாவில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு 795 ஆக உயர்ந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+