கொரோனா ஒருநாள் பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா 2-வது இடம்
டெல்லி: ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 22,510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,31,622 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,40,116 ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 66,23,119 ஆக இருக்கிறது. அமெரிக்காவில்தான் தொடர்ந்து பாதிப்புகள் அதிகமாக உள்ளன. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49,458 ஆக இருந்தது.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,510 ஆகும். ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. ஒருநாள் கொரோனா மரணங்களில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
பிரேசிலில்தான் ஒரே நாள் கொரோனா மரணங்கள் மிக அதிகமாக இருந்தது. பிரேசிலில் ஒரே நாளில் 656 பேர் கொரோனாவால் மாண்டுபோயினர். இதனையடுத்து இந்தியாவில்தான் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,39,705.
அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,32,961. பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,26,071. இங்கு கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 65,556 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பானது 7,.20,346 ஆக இருக்கிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 20,174 ஆகவும் உள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி மாநிலங்களில் மிக மோசமான கொரோனா பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் 2,11,987 பேருக்கும் தமிழகத்தில் 1,14,978 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் 1,00,823 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications