நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக.. தமிழில் அதிக உரைகள் நிகழ்த்தி சாதனை!
டெல்லி: நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக, நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. வேறு எந்த மொழியை விட தமிழில்தான் அதிக அளவில் உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 160 உரைகள், சொந்த மொழியில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில் தமிழில் மட்டும் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

யார் யார் தமிழில் பேசினார்கள்?
நாடாளுமன்றத்தை பொறுத்தவரை, சில எம்பிக்கள் தொடர்ந்து தமிழில்தான் பேசுவார்கள். சு.வெங்கடேசன், திருமாவளவன், பிரகாஷ், ஈஸ்வரசாமி, செல்வராஜ், தங்கத்தமிழ்ச்செல்வன், துரை வைகோ, சுப்பராயன், நவாஸ் கனி, வைத்திலிங்கம் இவர்கள் வழக்கமாக தமிழில்தான் பேசுவார்கள். அந்த வகையில் இந்த முறையும் தமிழில்தான் பேசினார்கள். அதேபோல கனிமொழி, தயாநிதி, பாலு உள்ளிட்ட சில எம்பிக்கள், வழக்கமாக ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால், இவர்கள் இந்த முறை தமிழில்தான் பேசினார்கள்.
இவர்களை தவிர ரவிக்குமார், மலையரசன், அண்ணாதுரை, செல்வம், தரணிவேந்தன், முரசொலி ஆகிய எம்பிக்களும் தமிழில்தான் பேசினார்கள். அதேபோல ஆ.ராசா, அருண் நேரு, கார்த்தி, ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், கலாநிதி வீராசாமி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஆங்கிலத்தில் பேசினார்கள்.
நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள்
இந்தியாவை பொறுத்தவரை, இங்கு தேசிய மொழி என்கிற செட்டப் கிடையாது. இந்திய பரவலாக பேசப்பட்டாலும், பெரும்பான்மையாக மாநில மொழிகள்தான் பேசப்படுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் மாநில மொழியில் பேச கோரிக்கைகள் எழுந்தன. 1950 முதல் எம்பிக்கள் தங்கள் தாய் மொழியில் பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதை மொழிப்பெயர்ப்பதில் சிக்கல்கள் இருந்தன. பின்னர் நவீன தொழில்நுட்பம் வந்ததையடுத்து மொழிபெயர்ப்பு சிக்கல் நீக்கியது.
தற்போதைய நடைமுறை என்ன?
தற்போது ஒரு எம்பி தனது தாய்மொழியில் பேச வேண்டும் எனில் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னர் அவையின் செயலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர், இதற்கான மொழிபெயர்ப்பு ஏற்பாடுகளை செய்வார். இருப்பினும் அவையில் தாய் மொழியில் பேசினாலும், அந்த உரை மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் அவை குறிப்பில் இடம் பெறும்.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications