50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்!
டெல்லி: இப்போது கடந்த சில நாட்களாகவே தொகுதி மறுசீரமைப்பு குறித்தே தேசியளவில் விவாதம் வெடித்துள்ளது.. தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன.. ஏன் கடந்த 50 ஆண்டுகளா இவை செய்யப்படவில்லை.. இப்போது ஏன் இது மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்துமே மக்கள் தொகை அதிகரிப்பு குறித்தே அதிகம் கவலைப்பட்டன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு இல்லை. மத்திய அரசு சார்பில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் செய்யப்பட்டன. தென் மாநிலங்கள் அதைச் சிறப்பாக அமல்படுத்தி மக்கள் தொகையைக் குறைத்த நிலையில், வட மாநிலங்களில் அதற்குப் பெரியளவில் பலன் இல்லை.

தொகுதி மறுசீரமைப்பு
"மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள், அதுதான் நாட்டுக்கு நல்லது" என்று மத்திய அரசு சொன்னதைக் கேட்டு, கச்சிதமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு இப்போது 'அரசியல் அதிகாரம்' குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த 50 ஆண்டுக்கால வரலாறு என்ன? ஏன் தொகுதி மறுசீரமைப்பு 1970களில் நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
கடந்து வந்த பாதை
இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது தான் விதி. 1952, 1963, 1973 ஆண்டுகளில் அதன்படியே தொகுதி மறுவரையை செய்யப்பட்டது.
1952-ஆம் ஆண்டு: 494 தொகுதிகள் (1951-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்)
1963-ஆம் ஆண்டு: 522 தொகுதிகள் (1961-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்)
1973-ஆம் ஆண்டு: 543 தொகுதிகள் (1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்)
எனத் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. ஆனால், 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு ஒரு பெரிய சிக்கல் உருவானது.
தெற்கு vs வடக்கு
1970களில் இந்தியா 'சிறு குடும்பம் செல்வக் குடும்பம்' எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. அந்த திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி தமிழ்நாடு, கேரளா போன்ற தெற்கு மாநிலங்கள் மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தின. அதேநேரம் வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறையாமல் எகிறிக்கொண்டே சென்றது.
லாக் செய்த காங்கிரஸ் அரசு
ஒருவேளை 1981ல் தொகுதி மறுசீரமைப்பு நடந்திருந்தால், மக்கள் தொகையைக் குறைத்த தமிழ்நாட்டிற்குத் தொகுதிகள் குறைந்திருக்கும். மாறாக, மக்கள் தொகையை அதிகரித்த உபி-க்குத் தொகுதிகள் கூடி இருக்கும். "நல்லா படிக்கிற பையனுக்கு மார்க்கைக் குறைச்சு, பெயிலான பையனுக்கு மார்க்கை ஏத்துற கதையா இது இருக்குமே!" எனத் தென் மாநிலங்கள் கொதித்தன.
தென் மாநிலங்களின் அச்சத்தைப் புரிந்துகொண்ட அப்போதைய மத்திய அரசு, 1976ல் ஒரு அதிரடி முடிவெடுத்தார். இதற்காக 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, "2001ம் ஆண்டு வரை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது; 1971 மக்கள் தொகை கணக்கே இறுதியானது" எனத் தொகுதிகளை முடக்கினார். மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், அதற்காகத் தங்களது அரசியல் அதிகாரத்தை இழந்துவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம்.
சம்மதித்த பாஜக அரசு
2001-ல் இந்தத் தடை முடிவுக்கு வந்தபோது, நிலைமை இன்னும் மாறவில்லை. தென் மாநிலங்கள் மக்கள் தொகையை மேலும் சிறப்பாகக் குறைத்திருந்தன. ஆனால், வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்தே வந்தது. அப்போது மத்தியில் பாஜக அரசு இருந்த போதிலும், மீண்டும் ஒரு 25 ஆண்டுகளுக்கு (அதாவது 2026 வரை) இந்தத் தடையை நீட்டிக்க ஒப்புக்கொண்டது. இதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வந்தார் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்.
அந்த 25 ஆண்டுக்கால தடையும் இப்போது (2026-ல்) முடிவுக்கு வருகிறது. 1971ல் இருந்த மக்கள் தொகைக்கும், இன்றைய 2026 மக்கள் தொகைக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. 1971-ல் உபி-க்கும் தமிழ்நாட்டிற்கும் இருந்த மக்கள் தொகை வித்தியாசம் குறைவு... இன்று உபி-யின் மக்கள் தொகை தமிழ்நாட்டை விடப் பல மடங்கு அதிகம். எனவே, மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பைச் செய்வதில் தீவிரமாக உள்ளது.
அதிகரிக்கும்
இதனால் புதிய மறுசீரமைப்பு நடந்தால் வட மாநிலங்களின் தொகுதிகள் 70% முதல் 80% வரை அதிகரிக்கும்.. ஆனால் தென் மாநிலங்களுக்கு 30% மட்டுமே அதிகரிக்கும். இது நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் குரலை வலிமையிழக்கச் செய்துவிடும் என்பதுதான் தற்போதைய பதற்றத்திற்குக் காரணம். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை சிறப்புக் கூட்டம் நடக்கும் நிலையில், வாதங்கள் அனல் பறக்கும் என்றே தெரிகிறது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications