கைவிடப்படும் "இந்திய அரசியலின்" கம்பீர அடையாளம்! உதயமாகும் புதிய நாடாளுமன்றம்- வரலாறுதான் என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "இந்திய அரசியலின்" கம்பீர அடையாளமான தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்றுதான் கடைசிநாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நாளை முதல் "புதிய நாடாளுமன்ற" கட்டிடத்தில் இனி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு கூட்டியுள்ளது. இன்று முதல் வரும் 22-ந் தேதி வரை இந்த சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும்.

History of Old, New Parliament Buildings of India

தற்போதைய நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் இன்று மட்டும் கூட்டம் நடைபெறும். நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்திய நாடாளுமன்ற கட்டிடங்களின் வரலாறு..

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடமானது ஆங்கிலேயர் ஆட்சியில் 1921-ம் ஆண்டு கன்னாட் பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1927-ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் இர்வின் திறந்து வைத்தார்.

1927-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி நாடாளுமன்றத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது.

1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி இந்தியா விடுதலைக்கு முந்தைய முதல் அரசியலமைப்பு சபை கூட்டம் இந்த கட்டிடத்தில் நடைபெற்றது.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி நள்ளிரவில் அரசியலமைப்பு சபையில் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறும் ஆட்சி மாற்ற நிகழ்வு நடந்தது.

நாடு விடுதலைக்குப் பின் 1952-ம் ஆண்டு மே 13-ந் தேதி நாடாளுமன்றத்தின் இரு சபைகளுடன் முதலாவது அமர்வு நடைபெற்றது.

1970-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ந் தேதி நாடாளுமன்றத்துக்கான புதிய இணைப்பு கட்டிடத்துக்கு ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி அடிக்கல் நாட்டினார். இந்த இணைப்பு கட்டிடத்தை 1975- ம் ஆண்டு அக்டோபர் 24- ந் தேதி பிரதமராக இருந்த இந்திரா காந்தி திறந்து வைத்தார்.

1987-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி இந்த நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்துக்கு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டினார். 2002-ம் ஆண்டு மே 7-ந் தேதி நாடாளுமன்ற நூலக கட்டிடத்தை ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணன் திறந்து வைத்தார்.

2017-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்ட இணைப்பு கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

History of Old, New Parliament Buildings of India

2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2023-ம் ஆண்டு மே 28-ந் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத் தைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+