திகார் சிறையில் அறை எண் 2ல் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால்.. ஜெயிலில் கிடைக்கும் சிறப்பு சலுகைகள் என்னென்ன?
டெல்லி: வருகிற 14 ஆம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு வீட்டு சாப்பாடு, சாக்லேட் மிட்டாய்கள் வழங்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்றுடன் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கதுறை மேற்கொண்டு காவலில் விசாரிக்க அனுமதி கோரவில்லை.

இதனால் அரவிந்த கெஜ்ரிவால் வருகிற 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, சாக்லேட் மிட்டாய்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பாட்டில் குடிநீர், தலையணை உள்ளிட்டவை வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதேபோல், கெஜ்ரிவால் தனது மனைவியை தினமும் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மதுபான கொள்கை முறைகேடு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது.
புதிய மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது, சட்டவிரோதப் பரிவர்த்தனை என நடைபெற்றது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாகக்த்துறை திட்டமிட்டது. இதற்காக அமலாக்கத்துறை பலமுறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், இந்த சம்மனை ஏற்று ஆஜராகாமல் கெஜ்ரிவால் புறக்கணித்து வந்தார். இந்த நிலையில், தான் கடந்த மாதம் 21 ஆம் தேதி கெஜ்ரிவால் வீட்டிற்கே சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்தனர். கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுக்க விரும்பவில்லை என்று அமலாகக்துறை கோரியதையடுத்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
வரும் 14 ஆம் தேதி வரை கெஜ்ரிவால் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று பிற்பகல் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள திகார் சிறைசாலைக்கு கொண்டு செல்லப்பட்டர். அவரை திகார் சிறையில் உள்ள அறை எண் 2 ல் போலீசார் அடைத்தனர். கெஜ்ரிவால் முதல்வராக இருப்பதால் விதிகளின் படி அவருக்கு சில சலுகைகள் கிடைக்கும்.
இதுபோக மேலும் சில சலுகைகளை கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு திகார் சிறையில் அறை எண் 2 ஒதுக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, பாட்டில் குடிநீர், தலையணை, சாக்லேட் மிட்டாய்கள் உள்ளிட்டவை வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதேபோல், கெஜ்ரிவால் தனது மனைவியை தினமும் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளி என்பதால், அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோக, பகவத் கீதா, ராமாயணம் மற்றும் ஹவ் பிரைம் மினிஸ்டர் டிசைட்ஸ் ஆகிய நூல்களையும் தன்னுடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications