உள்நாட்டுப் பாதுகாப்பு.. தோவல் உள்ளிட்டோருடன் அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!
டெல்லி உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று அவசர ஆலோசனை நடைபெற்றது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக்குழு ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கௌபா மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

கச்சா எண்ணெய் இறக்குமதி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது ஆகிய பிரச்சினைகள் குறித்து அமித்ஷா நேற்று முன்தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய சூழலில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களின்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம், 35-ஏ மற்றும் 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்டவை உறுதியாக அமல்படுத்தப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமித் ஷா, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் கடந்த சனிக்கிழமை சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பது, மாவோயிஸ்ட்களை தடுப்பது, இவர்கள் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications