Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனஅழுத்தத்துக்கு தீர்வு.. இந்தியாவில் அறிமுகமான Homecoming புத்தகம்.. இது டாப் பெண்களின் அனுபவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மனஅழுத்தத்தை தற்போது பலரும் எதிர்கொண்டு வருகிறோம். இது அதிகமாகும்போது தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புள்ளது. மனஅழுத்தத்தில் இருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும். இந்நிலையில் தான் இந்தியாவில் முதல் முதலாக மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி? என்பது பற்றி தொழில்முனைவோர், கல்வியாளர்கள் என்று 11 பேர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ‛ஹோம் கம்மிங்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

homecoming westland books

டெல்லியில் உள்ள இந்தியா ஹாபிடேட் மையத்தில் நேற்று ‛வெஸ்ட்லேண்ட் புக்ஸ்’ சார்பில் நேஹா கிர்பால் மற்றும் டாக்டர் நந்தினி முரளி ஆகியோர் இணைந்து எழுதிய ‛‛Homecoming: Mental Health Journey of Resilience, Healing and Wholeness’’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்திய மனநலஆரோக்கியம் அலையன்ஸ் (IMHA or India Mental Health Alliance) அமைப்புடன் இணைந்து இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

homecoming westland books

பெண்களின் அனுபவம்

தற்போது ஒவ்வொரு மனிதர்களும் மனதளவில் பிரச்சனைகள், சவால்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. மனநல பிரச்சனைகள், சவால்களை எப்படி எதிர்கொள்வது, அதனை கடந்து எப்படி சாதிப்பது என்பது பற்றி பல பெண்கள் தங்களின் அனுபவத்தில் இருந்து இந்த புத்தகத்தில் கூறியுள்ளனர்.

homecoming westland books

11 பேரின் கருத்துகள்

தொழில் முனைவோர்,சமூக ஆர்வலர்கள், மனநல மருத்துவர்கள், கல்வியாளர்கள், கொடையாளர்கள் உள்பட 11 பெண்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். இந்த புத்தகத்தில் மனசோர்வு, ஓசிடி, பதற்றம், தலைமுறைகள் இடையேயான இடைவெளி பிரச்சனை, தற்கொலை உயிரிழப்புகள் குறித்து கூறியுள்ளனர்.

homecoming westland books

அனுபவ பகிர்வு

புத்தக ஆசிரியர்களான நேஹா கிர்பால் ,டாக்டர் நந்தினி முரளி ஆகியோருடன் டாக்டர் பூர்ணிமா விஸ்வநாதன், ஜைனாப் படேல், டாக்டர் கவிதா அரோரா, சித்ரா நையர், கைரவி பரத் ராம், டாக்டர் பெரோசா ஜே. கோத்ரேஜ் மற்றும் ஜனனி ஐயர் உள்ளிட்டவர்களும் தங்களின் அனுபவங்களை விழா மேடையில் பகிர்ந்துள்ளனர். அதேபோல் சட்டம் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்களும் பங்கெடுத்து தங்களின் அனுபவங்களை கூறினர்.

homecoming westland books

நேஹா கிர்பால் பேச்சு

இந்த விழாவில் அமஹா ஹெல்த், சில்ட்ரன் ஃபர்ஸ்ட், இந்திய மனநல ஆரோக்கிய அலையன்ஸ் (IMHA) மற்றும் இந்தியா ஆர்ட் ஃபேரின் முன்னாள் நிர்வாகியும், புத்தக ஆசிரியருமான நேஹா கிர்பால் கூறுகையில், ‛‛மனச்சிதைவு (schiophrenia)உள்ள பெற்றோருக்கான பாதுகாவலராகவும், உடன்பிறந்தவரை இழந்தவர் என்ற அடிப்படையில் மனநலம் சார்ந்த சேவைகளுக்கான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது முக்கியமானது.

'ஹோம்கமிங்' புத்தகம் பல நபர்களின் கதைகளை கொண்டுள்ளது. இந்த புத்தகம் தனிநபர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும். பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் அமைப்புகளை உருவாக்க இது ஊக்குவிக்கும்'' என கூறினார்.

homecoming westland books

நந்தினி முரளி பேச்சு

இந்த விழாவில் Speak நிறுவனர், அவ்தார் எனும் பாலினம் மற்றும் பன்முகத்தன்மை அமைப்பின் லேர்னிங் - ரீசர்ஜ் பிரிவு துணை தலைவராக இருக்கும் புத்தக ஆசிரியரான டாக்டர் நந்தினி முரளி கூறுகையில், ‛‛பெண்கள் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பராமரிப்பு முதல் ஓரங்கப்பட்டப்டுவது வரை தினமும் பல்வேறு சுமைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் அவர்கள் மனநல சார்ந்த பேச்சுகளை கொடுப்பது இல்லை. இந்த 'ஹோம்கமிங்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் தங்களின் அனுபவங்களை நேர்மையுடன் பகரி்ந்து கொண்டுள்ளனர். அதோடு ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் வகையில் விடையை எழுதி உள்ளனர்'' என்றார்.

மொத்தத்தில் சமூகத்தில் சவால்களை சந்தித்து உயர்ந்துள்ள பெண்களின் தனிப்பட்ட அனுபவங்களை ஒன்றாக்கி இருப்பதன் மூலம் இந்த புத்தகம் இந்தியாவின் மனநல பிரச்சனையில் தவிப்போருக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஏனென்றால் பெண்கள் எப்படி சோர்வு, பாகுபாடு, அடக்குமுறை உள்ளிட்டவற்றை எதிர்கொள்கிறார்கள்? அதில் விடுபடுவது எப்படி? என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது.

நேஹா கிர்பால் யார்?

இந்த புத்தகத்தை எழுதிய நேஹா கிர்பால் மனநல ஆலோசகராகவும், தொழில் முனைவோராக இருக்கிறார். இவரது பெற்றோர் மனச்சிதைவு நோயால் (ஸ்கிசோஃப்ரினியா) பாதிக்கப்பட்டவர்கள். உடன்பிறந்தவர் தற்கொலை செய்து விட்டார். இருப்பினும் வாழ்க்கையில் நம்பிக்கையை அவர் தளரவிடாமல் தனது பெற்றோரை பராமரித்து பாதுகாத்து வருகிறார்.

இந்தியா ஆர்ட் ஃபேர் என்ற அமைப்பை 2008 ம் ஆண்டு தொடங்கி 2018 ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். அதன்பிறகு மனநலம் சார்ந்த பிரச்சனைகளை போக்குவதில் கவனம் செலுத்த தொடங்கினர். 2019 ம் ஆண்டில் அமஹாவின் இணை நிறுவனராக அவர் செயல்பட தொடங்கினர்.
இதுகுழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மனநல ஆலோசனைகளை தரும் அமைப்பாகும்.

இன்று அது தனியார் மனநல சேவையை வழங்கும் பெரிய அமைப்பாக மாறி உள்ளது. மனநல மருத்துவர்கள் உள்பட 200க்கும் அதிகமானவர்களை ஒருங்கிணைத்து இந்தியா முழுவதும் 600 நகரங்களில் இந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர் உள்பட 8 பெரிய நகரங்களில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் சிறப்பு மனநல மருத்துவமனையை அமஹா திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+