ஹனிமூன் கொலை: காதலனுடன் சிரித்தபடி நெருக்கமாக போஸ் கொடுத்த சோனம்.. இன்னொரு கொலைக்கு வேற திட்டமாம்
சில்லாங்: மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சோனம் தன் கணவனை கொல்ல காதலனுடன் இணைந்து போட்ட சதித்திட்டம் வெளியாகியுள்ளது. மேலும் காதலனுடன் சோனம் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளன.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கு, சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த புதுமண தம்பதி மே 20 ஆம் தேதி மேகாலயா மாநிலத்துக்கு ஹனிமூன் சென்றனர். மே 23 ஆம் தேதி புதுமண தம்பதி மாயமாகினர்.

இந்த சம்பவம் ராஜா, சோனம் குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல் பொது மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேகாலயா காவல்துறை புதுமண தம்பதியை தேடி வந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்படவே வழக்கில் மர்மம் அதிகரிக்க தொடங்கியது.
மனைவி சோனத்துக்கு என்ன ஆச்சோ என்று உறவினர்கள் பதறிக் கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபூரில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காதலன் மற்றும் கூலிப்படையினருடன் இணைந்து கணவனை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜாவை திருமணம் செய்வதற்கு முன்பே சோனம் ராஜ் குஷ்வஹா என்ற தன்னை விட வயதில் சிறிய இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரின் குடும்பத்தினர் சம்மதிக்காத காரணத்தால், திருமணத்துக்கு பிறகு ராஜாவை கொன்றுவிட்டு காதலர்கள் ஒன்றாக வாழ முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினர் சோனம், ராஜ் மற்றும் கூலிப்படையினரை கைது செய்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. கைது செய்யப்பட்ட அனைவரையும் கஸ்டடியில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "ராஜா ரகுவன்ஷி கொலைக்கு சோனம், ராஜ் இருவரும் பக்காவாக திட்டமிட்டுள்ளனர். ராஜாவை கொலை செய்தவுடன் அவர்கள் மற்றொரு திட்டத்தை வைத்திருந்தனர். இந்த வழக்குக்கே சம்பந்தமில்லாத அப்பாவி பெண்ணை கொலை செய்து, உடலை எரித்து ராஜாவின் உடல் அருகே போட்டு விடலாம் என நினைத்தனர்.
இதன் மூலம் அனைவரும் அது சோனம் என்று நம்பிவிடுவார்கள் என்று கணக்கு போட்டனர். அதற்காக தான் சோனம் தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இந்தூரில் ஒரு அப்பார்ட்மென்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதிலும் அவர்கள் நேரடியாக ஈடுபடவில்லை. வேறு ஒருவர் மூலமே இவர்கள் வாடகைக்கு எடுத்தனர்.
மாதம் ரூ.17,000 வாடகை அடிப்படையில் வாடகைக்கு சென்றனர். வைப்புத் தொகையாக ரூ.34,000 கட்டியுள்ளனர். அது புதிதாக கட்டப்பட்ட அப்பார்ட்மென்ட் என்பதால் சிசிடிவி கேமரா இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு சென்றுள்ளனர். மேலும் ராஜா ரூ.5,000 மதிப்பிலான மளிகை பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
அவர்கள் அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கு முன்பு காவல்துறை நெருங்கிவிட்டோம். தற்போது அவர்களை 8 நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரித்து வருகிறோம். மேலும் 3 நாள்கள் கஸ்டடியில் விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளோம்." என்றனர். இந்நிலையில் சோனம் தன் காதலன் ராஜ் குஷ்வஹாவுடன் சிரித்த முகத்துடன் நெருக்கமாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications