"மெகா ஜாக்பாட்!" உச்சம் தொட்ட தக்காளி விலை! ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான ஏழை விவசாயி! வேற லெவல் சம்பவம்
டெல்லி: நாடு முழுக்க தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ஒரே மாதத்தில் தக்காளி விற்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
தக்காளி விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இடைவிடாத மழை உள்ளிட்ட பல காரணங்களால் தக்காளி விலை சில வாரங்களில் பல மடங்கு அதிகரித்துவிட்டது.
மழையால் தக்காளிகள் செடிகளிலேயே கெட்டுவிடுகிறது. மேலும், விநியோகமும் கனமழையால் பாதிக்கப்படும் நிலையில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது.

தக்காளி: இந்தியாவில் பல இடங்களில் ஏற்கனவே தக்காளி விலை ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை எல்லாம் கடந்துவிட்டது. சொல்லப்போனால் டெல்லி, மும்பை உள்ளிட்ட சில இடங்களில் தக்காளி விலை ரூ. 200ஐ கூட எட்டியுள்ளது. தக்காளி விலை இந்தளவுக்கு உச்சம் தொட்டுள்ள நிலையில், அதைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுவாகவே பருவமழை காலத்தில் தக்காளி விலை அதிகரிக்கும் என்ற போதிலும், குறைந்த காலத்தில் இந்தளவுக்குத் தக்காளி விலை உயரும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இப்படி நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் தக்காளி பயிரிட்ட விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. துக்காராம் பாகோஜி கயாகர் என்ற அந்த விவசாயி ஒரே மாதத்தில் ரூ.1.5 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளனர்.
கோடீஸ்வரர்: துக்காராமுக்கு சொந்தமாக 18 ஏக்கர் விவசாய நிலமும் இருக்கிறதாம். இதில் சுமார் 12 ஏக்கர் நிலத்தில் அவர் தக்காளியையே பயிரிட்டுள்ளார். இங்கே அவர் தனது மகன் ஈஸ்வர் காயகர் மற்றும் மருமகள் சோனாலி ஆகியோருடன் இணைந்து விவசாயம் செய்து வருகிறார். உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்துச் சரியான புரிதல் இருப்பதால் தேவையான கெமிக்கல்களை மட்டுமே பயன்படுத்தி உட்சபட்ச அறுவடையை இந்தக் குடும்பத்தினரால் அடைய முடிகிறது.
அப்படி தக்காளி பெட்டியை இவர் 2,100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இப்படிக் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 900 பெட்டிகளை விற்று ஒரே நாளில் ரூ.18 லட்சம் சம்பாதித்துள்ளார். கடந்த மாதம், தக்காளியை 1,000 ரூபாய் முதல், 2,400 ரூபாய் வரை விற்றுள்ளார். இதன் மூலம் ஒரு மாதத்தில் அவர் 1.5 கோடி ரூபாயைச் சம்பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

80 கோடி: புனே மாவட்டத்தில் உள்ள ஜுன்னாரில் விவசாயிகள் பலரும் தக்காளி பயிரிடும் நிலையில், அவர்கள் பலரும் கடந்த ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆகியுள்ளனர். கடந்த ஒரே மாதத்தில் மட்டும் அங்கே தக்காளி மட்டும் 80 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகியுள்ளதாக அம்மாவட்ட வர்த்தக குழு தெரிவித்துள்ளது. மேலும், இதன் மூலம் அங்குள்ள பல நூறு பெண்கள் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.
விவசாயி துக்காராமை பொறுத்தவரை அவரது குடும்பத்தினரே பெரும்பாலான வேலைகளையும் கவனித்துக் கொள்கிறார்களாம். அவர்களுக்கு விவசாயத்தில் நீண்ட அனுபவம் இருப்பதால் அதை வைத்து துல்லியமாக அதிக லாபத்தை ஈட்ட முடிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது அந்த பகுதியில் நல்ல தரமான தக்காளி ஒரு கிலோ ரூ. 125க்கு விற்பனையாகிறது.
மகாராஷ்டிரா மட்டுமின்றி இந்தியாவில் பல பகுதிகளிலும் தக்காளி விவசாயிகளுக்குக் கடந்த ஒரு மாதத்தில் மிகப் பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. ஒரே மாதத்தில் அவர்கள் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications