முழுசா மூணு மாசம் கூட சேர்ந்து வாழல.. மாரடைப்பால் கணவன் பலி.. சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!
டெல்லி: தலைநகர் டெல்லியில் திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன ஒரு ஜோடி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்த ஷாக் சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.
டெல்லியில் காஜியாபாத்தில் உள்ள ஒரு இளம் ஜோடிக்கு ஷாக் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள உயிரியல் பூங்கா ஒன்றுக்கு அந்த ஜோடி சென்ற நிலையில், 24 மணி நேரத்திற்குள் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பான செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த இளம் ஜோடி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நெட்டிசன்களை உலுக்குவதாக இருக்கிறது.
அடுத்தடுத்து மரணம்: முதலில் 25 வயதான அபிஷேக் அலுவாலி என்ற இளைஞர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அஞ்சலி, அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த ஜோடிக்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி தான் திருமணம் நடந்துள்ளது. புதுமண தம்பதிகளான இவர்கள் நேற்று திங்கட்கிழமை டெல்லி உயிரியல் பூங்காவிற்குச் செல்ல திட்டமிட்டனர். அதன்படி நேற்று உயிரியல் பூங்காவுக்குச் சென்ற அவர்கள் பூங்காவைச் சுற்றிப் பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அபிஷேக்கிற்கு அங்கேயே நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது என்ன செய்வதென்று புரியாமல் பதறிய அஞ்சலி, உடனடியாக தனது நண்பர்களை அழைத்துள்ளார்.
"கொரோனா வைரஸ்.." இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு.. என்ன காரணம்? மன்சுக் மாண்டவியா அலர்ட்
என்ன நடந்தது: தொடர்ந்து அபிஷேக் முதலில் அருகே உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அங்கிருந்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கே மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டார். மாரடைப்பு காரணமாக அபிஷேக் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் காஜியாபாத்தின் வைஷாலியில் உள்ள அல்கான் குடியிருப்பிற்கு அன்றிரவு 9 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. திருமணம் ஆகி 4 மாதங்கள் கூட ஆகாத நிலையில், கணவரின் உடலைப் பார்த்த அஞ்சலி அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், ஏழாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
மனைவியும் பலி: இதனால் பதறி அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைஷாலி மேக்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அஞ்சலியும் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அபிஷேக்கின் உறவினர்கள் கூறுகையில், "அபிஷேக் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தது முதலே அருகே உட்கார்ந்து அஞ்சலி எழுந்து அழுதுகொண்டே இருந்தாள். அப்போது திடீரென எழுந்து அவள் பால்கனியை நோக்கி ஓடினாள். அவர் குதித்து விடுவாரோ என்று பயந்து அவரை பிடிக்கப் பாய்ந்தோம். ஆனால், அதற்குள் அவர் குதித்துவிட்டார்.
அதிகரிக்கும் மாரடைப்பு: இந்தியாவில் சமீப காலங்களாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஷாக் சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே நமது நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பள்ளி செல்லும் சிறுவர்கள் கூட அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications