ஆனந்த் அம்பானி முதல்முறையாக ராதிகாவை எங்கே சந்தித்தார்.. இருவரும் எத்தனை ஆண்டுகளாக காதலிக்கிறார்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் கோலாகலமாக முடிந்த நிலையில், அவர்கள் இருவரும் முதல்முறையாக எப்படிச் சந்தித்துக் கொண்டார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத் ஜாம்நகரில் நடந்தது. இதில் உலகின் டாப் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

How Anant Ambani meet Radhika Merchant as their pre wedding celebration is now trending


இந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் தம்பதி முதல்முறையாக எப்படிச் சந்தித்துக் கொண்டார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.

ஜோடி: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் எப்படி முதலில் சந்தித்தார்கள் என இருவருமே எங்கும் சொன்னது இல்லை. இருப்பினும், அவர்களின் குடும்பங்கள் பகிர்ந்து கொண்ட கூட்டு அறிக்கையின்படி, இருவரும் ஒருவருக்கொருவர் பல ஆண்டுகளாக அறிந்திருக்கிறார்கள். சிறுவயதிலிருந்தே அவர்கள் நண்பர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் மிகவும் தாமதமாகவே டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இருவருக்கும் கிட்டதட்ட ஒரே சர்கிள் என்பதால் இருவரும் குழந்தைகளாக இருக்கும் போதே அவ்வப்போது சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஆனந்த் அம்பானி தனது உயர் கல்வியைத் தொடர ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், ராதிகா மெர்ச்சன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.

போட்டோ: இவர்கள் இருவரும் காதலிப்பதாக முதலில் கடந்த 2020ஆம் ஆண்டு தான் தகவல் பரவியது. அப்போது ராதிகா மெர்ச்சண்ட் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆனந்த் அம்பானியுடன் ஜோடியாக இருக்கும் படத்தை பகிர்ந்திருந்தார். அதில் இருவரும் ஆலிவ் பச்சை நிற ஆடைகளை அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்து இருந்தனர். இது தொடர்பாக இருவருமே அப்போது விளக்கமளிக்காத நிலையில், இருவரும் காதலிப்பதான தகவல் மேலும் பரவியது.

இந்தச் சூழலில் தான் இத்தாலியில் நடந்த இஷா அம்பானியின் நிச்சயதார்த்த விழாவிலும் ராதிகா மெர்ச்சன்ட் கலந்து கொண்டார். அப்போதும் கூட இருவரும் காதலிப்பதாகத் தகவல் பரவின. அப்போது அனைத்து திருமண நிகழ்விலும் ராதிகா கலந்து கொண்டார். தொடர்ந்து 2019இல் நடந்த ஆகாஷ் அம்பானி திருமணத்திலும் அவர் கலந்து கொண்டார். மேலும், டிசம்பர் 2021 இல், ஆகாஷ் மற்றும் ஷ்லோகா அம்பானியின் மகன் பிருத்வியின் முதல் பிறந்தநாள் ஜாம்நகரில் கொண்டாடப்பட்டபோதும் ​​ராதிகா அங்கே இருந்தார்.

அறிவிப்பு: இருப்பினும், இது குறித்த அறிவிப்பை யாருமே வெளியிடவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த 2022 ஜூன் மாதம் நடந்த ராதிகாவின் அரங்கேற்றம் விழாவை அம்பானிகள் தொகுத்து வழங்கினர். அப்போது தான் தங்கள் இளைய மகன் ஆனந்த் அம்பானியை ராதிகா திருமணம் செய்வதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்தாண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது.

7 வருஷம் ஆச்சு: இதற்கிடையே திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி பேசும் போது அவர் ராதிகாவை சந்தித்தது தொடர்பாகவும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர், "ராதிகாவை எனக்குக் கடந்த 7 ஆண்டுகளாக தனக்குத் தெரியும். நான் அவரை கண்டுபிடித்தது அதிர்ஷ்டம் தான். இங்கே நான் 100 சதவீதம் அதிர்ஷ்டசாலி.. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு ராதிகா எப்படிக் கிடைத்தார் என எனக்குத் தெரியவில்லை, அதனால் நான் நிச்சயமாக இங்கே அதிர்ஷ்டசாலி.

ஏழு வருடங்களாக அவரை தெரியும் என்றாலும் நேற்று தான் அவரை சந்தித்தது போல உணர்கிறேன்.. ஒவ்வொரு நாளும் நான் மேலும் மேலும் அவரை காதலிக்கிறேன். ராதிகாவைப் பார்த்தவுடன் என் இதயத்தில் பூகம்பமும் சுனாமியும் ஏற்பட்டது என்பதே உண்மை" என்று அவர் பேசியிருந்தார். இதன் மூலம் அவர்கள் ஏழு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவது உறுதியாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+