பல் துலக்க கூட விடமாட்டாங்களாம்.. பாகிஸ்தானிடம் சிக்கிய BSF வீரருக்கு நேர்ந்த கொடுமை.. உருக்கம்
டெல்லி: பஞ்சாப்பின் பெரோஸ்பூர் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது எல்லை பாதுகாப்பு படை வீரர் புர்னம் குமார் ஷா பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் சிக்கினார். 21 நாட்களுக்கு பிறகு அவர் நேற்று அட்டாரி - வாகா எல்லையில் நம் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் அவருக்கு இழைக்கப்பட்ட சித்ரவதை, கொடுமை பற்றி கண்களை கலங்க வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்தது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கடந்த 7ம் தேதி இந்தியா பதிலடி கொடுத்தது.

‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. அதன்பிறகு பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், குண்டு வீச்சு, எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனை நம் படை வீரர்கள் முறியடித்த நிலையில் பாகிஸ்தானின் 3 விமானப்படை தளம் அழிக்கப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமலானது. முன்னதாக கடந்த மாதம் 23ம் தேதி எல்லை பாதுகாப்புப் படை வீரர் புர்னம் குமார் ஷா பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் சிக்கினார். பெரோஷ்பூர் செக்டாரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது தவறுதலாக எல்லை தாண்டி சென்ற நிலையில் அவரை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில் தான் 21 நாட்களுக்கு பிறகு நேற்று நம் நாட்டிடம் எல்லை பாதுகாப்பு படை வீரர் புர்னம் குமார் ஷா ஒப்படைக்கப்பட்டார். பஞ்சாப்பில் அட்டாரி - வாகா எல்லை வழியாக அவர் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் எல்லை பாதுகாப்பு படையில் 24வது பிஎஸ்எஃப் பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார். எல்லை பாதுகாப்பு படையின் ‛கிசான் கார்டு' பிரிவிலும் செயல்பட்டு வந்தார். ‛கிசான் கார்டு' என்பது எல்லையோர விவசாயிகளை பாதுகாக்கும் பிரிவாகும்.
இந்நிலையில் தான் தற்போது புர்னம் குமார் ஷாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது புர்னம் குமார் ஷாவின் கண்கள் கட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவரை சரியாக தூங்கவிடாமல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவரை கடுமையாக திட்டி உள்ளனர். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி காலையில் பல் துலக்க கூட அனுமதிக்கப்படவில்லை.
3 இடங்களுக்கு மாற்றி மாற்றி அவரை அழைத்து சென்றுள்ளனர். அதில் ஒரு இடம் என்பது விமானப்படை தளத்தின் அருகே அமைந்து இருக்கிறது. கண்கள் கட்டப்பட்டு இருந்தாலும் கூட காதில் விமானங்களின் சத்தம் கேட்டுள்ளதால் அதனை அவர் உறுதியாக கூறியுள்ளார். அதேபோல் இன்னொரு இடத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் சாதாரண உடை அணிந்து வந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவரிடம் எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்பு படையினர், அதிகாரிகளின் பெயர் விபரங்களை கேட்டுள்ளார். செல்போன் எண்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர் வழங்கவில்லை.
பணியின்போது செல்போன் பயன்படுத்த கூடாது என்பதால் அவரிடம் செல்போனும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தானியர்களால் செல்போன் எண்ணை எடுக்க முடியாமல் போனது. இந்தியா வந்தவுடன் புர்னம் குமார் ஷா தனது குடும்பத்தை சந்தித்தார். அதன்பிறகு அவரிடம் நம் அதிகாரிகள் விசாரித்தனர். அவரது சட்டையில் ஏதேனும் ஒட்டுகேட்கும் கருவிகள் இருக்கலாம் என்பதால் அதனை அகற்றி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு புர்னம் குமார் ஷாவிடம் அதிகாரிகள் விசாரித்தனர். புர்னம் குமார் ஷா நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெிரவித்தனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications