யார் யாரோ நண்பன் என்று.. இந்தியாவிடம் மண்டியிட்ட பாகிஸ்தான்.. கடைசியில் மூக்கறுபட்ட சீனா, துருக்கி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவுடன் மேற்கொண்டு வந்த மோதலை பாகிஸ்தான் நிறுத்தி உள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு காரணம்.. பாகிஸ்தானை தீவிரமாக நம்பி வந்த சீனா, துருக்கி கடுமையாக ஏமாற்றம் அடைந்து இருக்கும்.

பாகிஸ்தான் மீதான தாக்குதலை மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சு வார்த்தையில் தாக்குதலை நிறுத்துவது என முடிவு என்று தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்தியதாக இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மோதல்களை நிறுத்துவது குறித்து இன்று மதியம் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதே சமயம், பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமில்லா நடவடிக்கையில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பின்வாங்கல்

பாகிஸ்தானின் இந்த முடிவு காரணம்.. பாகிஸ்தானை தீவிரமாக நம்பி வந்த சீனா, துருக்கி கடுமையாக ஏமாற்றம் அடைந்து இருக்கும். சீனாவின் ஏமாற்றத்திற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

How China and Turkey become the biggest losers in the India vs Pakistan war

1. பாகிஸ்தான் போரால் இந்தியாவில் நிலையற்ற தன்மை ஏற்படும் என்று சீனா எதிர்பார்த்து இருக்கும். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட போரில் மத்திய அரசுக்கு ஆதரவாக இறங்கியது.

2. பாகிஸ்தான் போரால் இந்தியாவில் முதலீடுகள் குறையும், பொருளாதாரம் சரியும் என்று சீனா எதிர்பார்த்து இருக்கும். ஆனால் 2 நாட்களில் பாகிஸ்தான் அடிபணிந்துவிட்டது.

3. பாகிஸ்தான் போரால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்று சீனா எதிர்பார்த்து இருக்கும். ஆனால் பாகிஸ்தானால் பெரிய போர் மேற்கொள்ளும் அளவிற்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

4. பாகிஸ்தான் போர் காரணமாக.. இந்தியாவில் அரசியல் பிரச்சனை வரலாம், நீண்ட கால வறுமை ஏற்படலாம், சர்வதேச அழுத்தம் ஏற்படலாம் என்று சீனா எதிர்பார்த்து இருக்கும். ஆனால் இந்தியா பாகிஸ்தானை கதறவிட்டதில் பாகிஸ்தான் பின்வாங்கிவிட்டது.

5. அதோடு பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் ஏவுகணைகளை இந்தியா வீழ்த்தியதன் மூலம் சீனாவின் ஆயுத பலம் அம்பலம் ஆகிவிட்டது.

துருக்கி ஷாக்

1. இன்னொரு பக்கம் போர் மோசமாகும் துருக்கி இதனால் ஆயுதங்களை விற்கலாம் என்று நினைத்து இருக்கும். அது நடக்கவில்லை.

2. துருக்கி தன்னை பலமான நாடாக காட்டிக்கொண்டது. ஆனால் துருக்கியின் டிரோன்களை கூட இந்தியா அடித்து நொறுக்கிவிட்டது.

3. இதனால் பல கோடி காசு பார்க்கலாம் என்ற துருக்கி கனவு தோற்றுவிட்டது.

5. அதோடு பாகிஸ்தான் பயன்படுத்திய துருக்கி டிரோன், ஏவுகணைகளை இந்தியா வீழ்த்தியதன் மூலம் துருக்கியின் ஆயுத பலம் அம்பலம் ஆகிவிட்டது.

பாகிஸ்தான் போரால் இந்தியா பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டால்.. மறைமுகமாக துருக்கியும், சீனாவும்தான் பாதித்து உள்ளது. யார் யாரோ நண்பன் என்று.. பாகிஸ்தானை நம்பி சீனா, துருக்கி ஏமாந்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+