இந்திய மண்ணை சீன ராணுவம் ஆக்கிரமித்தது எப்படி..பிரதமர் மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும்..சோனியா காந்தி
டெல்லி: நமது 20 ராணுவ வீரர்களின் தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்தது எப்படி என்பதை பிரதமர் மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்கிழமை அதிகாலை வரை இந்தியா சீன ராணுவ வீரரகளிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நமது 20 ராணுவ வீரர்களின் தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
இந்த துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் மையப்பகுதியிலிருந்து எனது அஞ்சலி செலுத்துகிறேன். இந்த வலியை எதிர்கொள்ள தங்கள் குடும்பங்களுக்கு பலம் அளிக்குமாறு சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இன்று எல்லை பிரச்னையால் வீரர்கள் உயிரிழந்ததால் நாட்டு மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். சீனா நமது நிலத்தை எவவாறு ஆக்கிரமித்தது. நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து எப்படி, லடாக்கில் என்ன நடக்கிறது. பிரதமர் மோடி, லடாக் எல்லை பிரச்னையில் உண்மையை சொல்ல முன்வர வேண்டும்.
நமது ராணுவ வீரர்கள் / அதிகாரிகளை இன்னும் காணவில்லையா? நமது வீரர்கள் / அதிகாரிகள் எத்தனை பேர் படுகாயமடைந்துள்ளனர்? சீனா எந்த பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது? இதைச் சமாளிக்க மத்திய அரசாங்கத்தின் கொள்கை என்ன? இந்த நெருக்கடியான நேரத்தில் நமது இராணுவம், ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்" என்றார்.
Recommended Video
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications