நானும் அங்கே தான் இருந்தேன்.. ஹமாஸ் தலைவரை ஈரானில் தூக்கிய இஸ்ரேல்.. நிதின் கட்கரி சொன்ன திடுக் தகவல்
டெல்லி: போருக்கு நடுவே ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியேவை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து இஸ்ரேல் தீர்த்து கட்டியது எப்படி? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவலை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். அந்த சம்பவம் நடந்தபோது நிதின் கட்கரி டெஹ்ரானில் இருந்ததோடு, இஸ்மாயில் ஹனியேவை தான் சந்தித்தாகவும், சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணிநேரங்களில் அவரை இஸ்ரேல் கொன்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் போரை தொடங்கியது. இந்த போர் கடந்த அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டுக்கு பிறகு போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
ஆனால் அதற்குள் காசாவில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றுவிட்டது. மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் போர் காலக்கட்டத்தில் இஸ்ரேல் தனது உளவு அமைப்பான ‛மொசாட்' அமைப்பினர் உதவியுடன் ஹமாஸ் அமைப்பினர் முக்கிய தலைவர்களை தீர்த்து கட்டியது.
இஸ்ரேல் தீர்த்து கட்டிய முக்கிய தலைவர்களில் ஒருவர் தான் இஸ்மாயில் ஹனியே. இவர் தான் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தார். 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் தீர்த்து கட்டியது. ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இஸ்மாயில் ஹனியே சென்றார். அதனை கண்காணித்த இஸ்ரேல் உளவு அமைப்பான ‛மொசாத்' அவர் தங்கியிருந்த ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி கொன்றது.
இந்நிலையில் தான் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் தீர்த்து கட்டியது பற்றி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கி உள்ளார். ஏனென்றால் அந்த சம்பவம் நடந்தபோது நிதின் கட்கரியும் அங்கு தான் இருந்தார். பிரதமர் மோடி சொன்னதை ஏற்று அவர் இந்தியா சார்பில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்று இருந்தார். இஸ்மாயில் ஹனியேவுடன் அவர் பேசிய அடுத்த சில மணிநேரத்தில் இஸ்ரேல் அவரை கொன்றது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவலை நிதின் கட்கரி பகிர்ந்துள்ளார்.
அதாவது டெல்லியில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்ட பிறகு நிதின் கட்கரி பேசினார். அப்போது தான் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றது பற்றி விளக்கினார். இதுபற்றி நிதின் கட்கரி கூறியதாவது: ‛‛ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் பதவியேற்பு விழாவிற்காக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நான் சென்றேன். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு விழா நடந்தது.
பல்வேறு நாடுகளின் தலைவர்களும் வந்திருந்தனர். ஆனால், நாட்டின் தலைவராக இல்லாத ஒரு நபரும் வந்திருந்தார். அதுதான் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே. அவரை நான் சந்தித்தேன். அதிபருடனும், தலைமை நீதிபதியுடனும் அவர் பதவியேற்பு விழாவுக்கு செல்வதை பார்த்தேன்.
பதவியேற்பு விழாவுக்கு பிறகு, நான் என் ஹோட்டலுக்குத் திரும்பினேன். அப்போது அதிகாலை 4 மணி இருக்கும். இந்தியாவுக்கான ஈரான் தூதர் என்னிடம் வந்து நாம் உடனடியாக கிளம்ப வேண்டும் என்றார். என்ன நடந்தது? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார். அதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அது எப்படி நடந்தது என்று கேட்டேன்?. அதற்கு அவர் அது எனக்கு இப்போதைக்குத் தெரியாது என்றார்.
பிறகு ஈரான் அதிகாரிகள் தான் சில விஷயங்களை உறுதி செய்தனர். 2024 ஜூலை 31 அன்று நள்ளிரவு 1:15 மணியளவில் படுகொலை நடந்ததாக தெரிவித்தனர். இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐ.ஆர்.ஜி.சி) மேற்பார்வையில் உள்ள பாதுகாப்பு மிக்க ராணுவ வளாகத்தில் தான் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்தார். இருப்பினும் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது பாதுகாவலர் கொல்லப்பட்டனர்.
இஸ்மாயில் ஹனியே எப்படி கொல்லப்பட்டார்? என்பது பற்றி இப்போதும் கூட சில உறுதியான தகவல்கள் இல்லை. செல்போனை குண்டாக பயன்படுத்தி கொல்லப்பட்டாதாக கூறப்படுகிறது. அதேபோல் இன்னும் பல தகவல்களை மற்றவர்கள் கூறி வருகின்றனர். என்னை பொறுத்தவரை ஒரு நாடு வலுவாக இருந்தால் எந்த நாட்டாலும் அதனை தொட முடியாது. இதற்கு உதாரணம் தான் இஸ்ரேல். இஸ்ரேல் சிறிய நாடு தான். ஆனால் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ராணுவத் திறனில் திறமையாக செயல்பட்டு வருகிறது'' என்று கூறினார்.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications