போக்குக் காட்டிய போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
டெல்லி: போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாபர் சாதிக் சென்னை, டெல்லியில் போதை பொருள் கடத்தியதாக டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஜாபர் சாதிக்கின் இருப்பிடத்தை தமிழக போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் டெல்லி என்சிபி அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் டெல்லி என்சிபி அதிகாரிகள், ஜெய்ப்பூரில் ஹோட்டலில் மறைந்திருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளிடம் தமிழக அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் ஜாபர் சாதிக்கின் செல்போன் சிக்னலை வைத்தும் அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னணி என்ன?: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் போதை பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15ஆம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 50 கிலோ வேதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ 2000 கோடியாகும். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். அவரை திமுக தலைமை, கட்சியிலிருந்து உடனடியாக நிரந்தரமாக நீக்கியது.
இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தங்கள் அலுவலகத்தில் பிப். 26 இல் ஆஜராகுமாறு டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 23 ஆம் தேதி ஜாபர் சாதிக்கின் வீட்டில் சம்மன் ஒட்டிச் சென்றனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிக்குவர் என தெரிகிறது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது. அவரிடம் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களின் பட்டியலை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கேட்பர் என தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications