ஆமா.. வெளிநாட்டு சதிக்கு எதிராக 'டீ' மான நஷ்ட வழக்கு போடுமா? கேட்டாரு பாருங்க ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய 'டீ'க்கு எதிராக சர்வதேச சதி நடப்பதாக அசாமில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்துக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டலுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறியிருந்தார், ஸ்வீடன் நாட்டின், சுற்றுச்சூழல்வாதி, கிரெட்டா துன்பெர்க். அவரது டுவிட்டர் பதிவுடன், டூல்கிட் ஒன்றையும் ஷேர் செய்திருந்தார். அதில், போராட்டக்காரர்களுக்கு உதவி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும், பிற நாட்டு தூதரகங்கள் முன்பாக போராட்டம் நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர், இந்த ட்வீட் டெலிட் செய்யப்பட்டது. ஆனால், இதுகுறித்து டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. எப்ஐஆரில் கிரெட்டா துன்பெர்க் பெயர் இடம் பெறவில்லை. ஆனால், அடையாளம் தெரியாத நபர்கள் இந்த சதியில் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

மோடி பேச்சு

மோடி பேச்சு

இந்த நிலையில், அசாமில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் செய்தார். வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கியாஜூலியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றம்தான், அசாமின் வளர்ச்சியுடன் இணைந்தது என்று சுட்டிக் காட்டினார்.

சதித் திட்டம்

சதித் திட்டம்

"இந்திய தேயிலை குறித்து அவதூறு செய்வதற்காக நாட்டிற்கு வெளியே ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதை உறுதி செய்ய சில ஆவணங்கள் வெளிவந்துள்ளன. அசாம் தேயிலைத் தொழிலாளர்கள் அதற்குப் பொருத்தமான பதிலைக் கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அசாமில் உள்ள எந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளியும் இந்த தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் நிச்சயம் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த சதிகாரர்களுக்கு எதிராக அசாம் டீ தொழிலாளர்கள் வெல்வார்கள். ஏனெனில், அவர்கள் இந்த சக்திகளை விட வலுவானவர்கள், "என்று பிரதமர் மோடி கூறினார்.

மான நஷ்ட வழக்கு

மான நஷ்ட வழக்கு

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறுகையில், இந்திய டீயை ஒருவர் எப்படி மதிப்பிழக்க வைக்க முடியும்? அடையாளம் தெரியாத அந்த நபர்கள் மீது 'டீ' மான நஷ்ட வழக்கு போடுமா? உலகிலுள்ள பல அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக டெல்லி போலீசார், வழக்குப் போட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தெரியாத விஷயம்

வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சில பிரபலங்களின் கருத்துக்களுக்கு வெளி விவகாரத்துறை பதிலளித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. "பிரபலங்கள் தங்களுக்கு அதிகம் தெரியாத விஷயங்களில் கருத்து கூறியுள்ளனர்" என்றார்.

டெல்லி காவல்துறை

டெல்லி காவல்துறை

இதனிடையே, டெல்லி காவல்துறை கூகுள் நிறுவனத்திற்கு பதிவு விவரங்கள் மற்றும் டூல் கிட் கணக்கின் செயல்பாட்டு விவரங்களை கோரி ஒரு கடிதம் எழுதியுள்ளது. "டூல்கிட்" பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய தீவிரமாக டெல்லி காவல்துறை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+