Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 பக்கம் இரும்பு பிளேட்! டெல்லியில் போலீஸ் தடுப்புகளை காலி செய்ய பொக்லைன் வாகனத்தை இறக்கிய விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீண்டும் தங்கள் டெல்லி சலோ போராட்டத்தைத் தொடங்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் படுதீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.

How farmers are getting ready to resume Dilli Chalo march with modified Poclain machines

அதன்படி இரண்டு நாட்கள் போராட்டம் நடக்காமல் இருந்த நிலையில், இப்போது மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.

விவசாயச் சங்கங்கள்: மூன்று வகையான பருப்பு வகைகள், சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை பழைய குறைந்தபட்ச ஆதரவு விலை முறையில் வாங்கும் வகையில் மத்திய அரசு ஒரு ஐந்தாண்டு ஒப்பந்தத்தை விவசாயிகளுக்கு முன்மொழிந்து இருந்தது. இந்த திட்டம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை நிராகரிப்பதாக விவசாயச் சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து மீண்டும் டெல்லி ஷம்பு எல்லையில் தங்களின் 'டெல்லி சலோ' போராட்டத்திற்காக விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். நாளை பிப்ரவரி 21 முதல் மீண்டும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்த உள்ளதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

பொக்லைன் இயந்திரம்: விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க எல்லையில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ள நிலையில், அதை காலி செய்ய பொக்லைன் இயந்திரங்களை விவசாயிகள் டெல்லி எல்லைக்கு ஓட்டி வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் உள்ளிட்ட பலரும் அந்த பொக்லைன் இயந்திரத்தைப் பார்க்க அந்த இடத்தில் கூடுவதால், போராட்ட களம் ஒரு கண்காட்சி நடக்கும் இடத்தை போல மாறும் சூழல் உள்ளது.

போலீசார் விவசாயிகளை விரட்டி அடிக்க கண்ணீர்ப்புகை குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தும் நிலையில், அதில் இருந்து தப்பிக்கவும் பொக்லைனில் உள்ள ஓட்டுநர் ரூமை தடிமனான இரும்பு தகடுகளை கொண்டு மூடியிருக்கிறார். மேலும், போலீசாரிடம் இருந்து தப்பும் வகையில் டிராக்டர்களிலும் கூட விவசாயிகள் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விவசாயிகள்: முன்னதாக விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், "​​மத்திய அரசு முன்வைத்த திட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனளிக்காது.. எனவே, போராட்டத்தைத் தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளைத் திசை திருப்பவும், நீர்த்துப் போகவும் மத்திய அரசு முயல்கிறது. ஆனால், அதெல்லாம் பலன் தராது. நாங்கள் கேட்பது ஒன்றுதான்.

சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள MSPக்கான 'C-2 பிளஸ் 50 சதவீதம்' ஃபார்முலாவைத் தவிர வேறு எதற்கும் விவசாயிகள் உடன்பட மாட்டார்கள். அதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளும் வரை போராட்டங்கள் தொடரும்" என்று அவர் அறிவித்தார்.

முன்னதாக விவசாயிகள் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் ​​மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, நித்யானநாத் ராய் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மத்திய அரசு சார்பில் கலந்து கொண்டனர். அப்போது மூன்று வகையான பருப்பு வகைகள், சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றைப் பழைய குறைந்தபட்ச ஆதரவு விலை முறையில் வாங்கும் வகையில் மத்திய அரசு ஒரு ஐந்தாண்டு ஒப்பந்தத்தை மத்திய அரசு முன்மொழிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+