Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவுக்கும் நண்பன்.. ரஷ்யாவையும் கைக்குள் போட்ட இந்தியா.. வரலாறு காணாத அளவு எண்ணை இறக்குமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவை மட்டுமே அதிகம் நம்பி இருக்கிறது. இதற்கான காரணம் என்ன.. இந்த நிலைக்கு நாம் வந்தது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

உலகின் பல்வேறு நாடுகளும் ஒன்று அமெரிக்காவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கும்.. அல்லது சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கும். ஆனால், இந்தியா மட்டுமே இரு நாடுகள் உடனும் நல்லுறவை வைத்துள்ளது.

 How India is maintaining relation with US and also importing Russian oil same time

நமது நாடு சுதந்திரம் பெற்றது முதலே ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. 2000களில் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவும் வலுவானது. இருப்பினும், இந்தியா அமெரிக்கா உறவு என்பது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் உறவைப் பாதிக்கவில்லை.

நல்லுறவு: இதன் காரணமாகவே உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது. உலகின் பல்வேறு நாடுகளும் கூட ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும் இந்தியா அதுபோல எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை. இதன் மூலம் இந்தியாவால் இரு முக்கிய நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரு தரப்பிடமும் நல்லுறவை வைத்திருக்க முடிந்தது.

இதற்கிடையே ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது அக்டோபர் மாதத்தில் திடீரென உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் மூன்றில் ஒரு பங்கை நாம் இப்போது ரஷ்யாவில் இருந்து தான் வாங்குகிறோம்.

ரஷ்யாவில் இருந்து அதிகம்: ரஷ்யாவிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மதிப்பு $3.78 பில்லியனாக உயர்ந்துள்ளது.. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் $2.62 பில்லியனாக இருந்த நிலையில், இந்தாண்டு இறக்குமதி அதைக் காட்டிலும் 44% அதிகரித்துள்ளது. கடந்த செப். மாதம் முதலே ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓராண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி சுமார் 9% வரை அதிகரித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை நாம் நமது கச்சா எண்ணெய் தேவையை பெரும்பாலும் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறோம். இந்த மாதத்திற்கான நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதி செலவு என்பது 12.43 பில்லியன் டாலராக இருக்கிறது. இது முந்தைய மாதத்தின் 10.42 பில்லியன் டாலரை காட்டிலும் அதிகமாகும்.

என்ன காரணம்: ரஷ்யா உக்ரைன் போருக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அவர்களிடம் கச்சா எண்ணெய் வாங்கவும் மறுத்தன. ஆனால் இந்த காலகட்டத்தில் தான் இந்தியா ரஷ்யாவில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.

மற்ற நாடுகள் வாங்க மறுத்ததால் இந்தியாவால் மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்க முடிந்தது. கடந்தாண்டு பேரல் ஒன்றுக்கு 30 டாலர் வரை டிஸ்கவுண்ட் கிடைத்த நிலையில், இந்தாண்டு அந்த சலுகை என்பது $5-6 டாலராக குறைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அடுத்துள்ள நாடுகள்: ரஷ்யாவுக்கு அடுத்து ஈராக் நாட்டில் இருந்து தான் நாம் அதிகம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறோம். கடந்த அக். மாதம் $2.83 பில்லியன் மதிப்பிலான கச்சா எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட $2.64 பில்லியனில் இருந்து 7.18% அதிகமாகும்.

இந்த இரு நாடுகளைத் தவிர சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் மற்றும் நைஜீரியா நாடுகளிடம் இருந்தும் முறையே $1.72 பில்லியன், $1.23 பில்லியன் மற்றும் $7.76 பில்லியன் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி 5.87% அதிகரித்துள்ளது. அதேநேரம் ஐக்கிய அமீரகம் மற்றும் நைஜீரியாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதி முறையே 27.94% மற்றும் 24.97% குறைந்துள்ளது. இது நாம் நமது கச்சா எண்ணெய் தேவைக்கு எந்தளவுக்கு ரஷ்யாவை சார்ந்து இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

மாறும் பிளான்: உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா இதுநாள் வரை பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்துள்ளது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை எடுத்து வரச் செலவு அதிகம் ஆகும் என்பதால் அரிதாகவே ரஷ்யாவிலிருந்து கொள்முதல் செய்தது. ஆனால், உக்ரைன் போருக்குப் பிறகு டிஸ்கவுண்ட் விலையில் கச்சா எண்ணெய் கிடைத்ததால் இந்தியா ரஷ்யாவில் இருந்து தனது கொள்முதலை அதிகப்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+