அடக்கி வாசித்த டிரம்ப்.. மருந்து மீதான 100% வரியால் இந்தியாவுக்கு பாதிப்பு கிடையாதாம்.. முழு டேட்டா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரியை விதித்துள்ளார். இந்த வரி அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளார். நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 45 கோடிக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் மருந்து ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டிரம்பின் வரி விதிப்பு நம்மை பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் உண்மையில் பாதிப்பு குறைவு தான் என்கின்றனர் நிபுணர்கள். அதன் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீத வரியை விதித்துள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில் ‛‛ அமெரிக்காவில் மருந்து நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும். இந்த வரி அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்'' என்று அறிவித்துள்ளார்.

how-india-will-not-affect-for-donald-trump-slaps-100-percent-tariff-on-branded-pharma-drug-imports

டிரம்ப் ஏற்கனவே நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். அதில் மருந்து, மாத்திரைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இப்போது அவர் காப்புரிமை மற்றும் பிராண்டட் மருந்துகளுக்கு 100 சதவீத வரியை விதித்துள்ளார். இது நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகளில் 3ல் ஒன்று இந்தியாவின் தயாரிப்பாக தான் இருக்கிறது.
இதனால் தான் டிரம்பின் வரி விதிப்பு நம் நாட்டின் மருந்து, மாத்திரை தயாரிப்பு நிறுவனங்களை பாதிக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உண்மையில் பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவுக்கு பாதிப்பு குறைவாக தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதுதான் ஜெனரிக் மருந்து - மாத்திரைகள்.

அதாவது டிரம்பின் 100 சதவீத வரி ஜெனரிக் மருந்துகளுக்கு பொருந்தாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இது நம் நாட்டுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2024ம் ஆண்டில் நம் நாட்டில் இருந்து உலகம் முழுவதும் 27.9 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 .21 லட்சம் கோடி) அளவுக்கு ஜெனரிக் மருந்து, மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதில், 31 சதவீதம் அமெரிக்காவுக்கு சென்றது. அதாவது 8.7 பில்லியன் டாலர். இது இந்திய மதிப்பில் ரூ.77,231 கோடியாகும். அமெரிக்காவுக்கு நாம் ஜெனரிக் மருந்துகளை தான் அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். கடந்த 2024ம் ஆண்டில் 12.7 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.106 லட்சம் கோடி) அமெரிக்காவுக்கு மருந்துகளை நாம் அனுப்பி இருந்தாலும் அதில் ரூ.77,231 கோடி ஜெனரிக் மருந்துகளாகும். இதனால் டிரம்பின் இந்த புதிய வரி விதிப்பு நம் நாட்டை பாதிக்காது.

இந்த ஆண்டு முதல் பாதியில் அமெரிக்காவுக்கு நாம் 3.7 பில்லியன் ஜெனரிக் மருந்து, மாத்திரைகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.32,505 கோடியாகும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் Dr Reedy's, Aurobindo Pharma, Zydus Lifesciences, Sun Pharma, Gland Pharma உள்ளிட்ட நிறுவனங்கள் தான் 30 முதல் 50 சதவீதம் வரை நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு மருந்து, மாத்திரைகளை ஏற்றுமதி செய்கின்றனர். இதில் பெரும்பாலானவை ஜெனரிக் மருந்து, மாத்திரைகள் ஆகும். இதனால் டிரம்பின் வரி விதிப்பு நம் நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதுபற்றி ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்டின் தலைமை முதலீட்டு நிபுணர் டாக்டர் வி.கே. விஜயகுமார் கூறுகையில், ‛‛இந்தியா ஜெனரிக் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறது. இதனால் அமெரிக்காவின் வரி விதிப்பால் உடனடியாக பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் இத்தகைய வரி விதிப்பு மருந்து நிறுவனங்களின் பங்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எதிர்காலத்தில் ஜெனரிக் மருந்துகள் மீது வரி விதிக்கப்பட்டால் அமெரிக்காவால் இந்தியா பாதிக்கப்படும்'' என்றார்.

அதேபோல், வெல்த்மில்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் Equity Startegy இயக்குநர் கிராந்தி பதினி கூறுகையில், ‛‛இந்தியாவின் பெரும்பாலான நிறுவனங்கள் ஜெனரிக் மருந்துகளை தான் அமெரிக்காவுக்கு அனுப்பி வருகிறது. இதனால் நம் நாட்டுக்கான பாதிப்பு பிற நாடுகளை ஒப்பிடும்போது குறைவாக தான் இருக்கும்'' என்றார். இதனால் தற்போதைய சூழலில் டிரம்பின் வரி விதிப்பில் இருந்து நம் நாடு தப்பியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் ஜெனரிக் மருந்துகளை குறிவைத்து டிரம்ப் வரி விதித்தால் அது நம் நாட்டுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+