கோலி நீக்கம்.. ரோகித் சர்மா கேப்டன்! சேத்தன் சர்மா செய்த “பாலிடிக்ஸ்” - பிசிசிஐயின் “கருப்பு பக்கம்”
இந்திய கிரிக்கெட் அணிக்குள் நடக்கும் அரசியல், கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்த ரகசியங்களை பிசிசி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி: பல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணிக்குள் உள்ளே நடக்கும் அரசியல் குறித்த பல்வேறு ரகசியங்களை அதன் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உளறி இருக்கிறார். தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் கோலி - கங்குலி இடையே இருந்த பிரச்சனை குறித்து அவர் பேசி உள்ளார்.
இந்தியாவின் விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் கிரிக்கெட்தான் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பிடித்தமான விளையாட்டாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை காண பள்ளி, கல்லூரிகள், வேலைக்கு கூட செல்லாமல் விடுமுறை எடுப்பவர்கள் உள்ளார்கள்.
இப்படி கிரிக்கெட்டை உயிர் மூச்சாக நேசிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவின் கருத்து.

ஸ்டிங் ஆபரேசன்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு நீக்கப்பட்டு தற்போது மீண்டும் அதே பொறுப்பில் அமர வைக்கப்பட்டு உள்ளார். இவரிடம் தனியார் தொலைக்காட்சி கடந்த வாரம் ரகசிய கேமராவை வைத்து பேசி ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கோலியின் ஈகோ
ஸ்டிங் ஆபரேசனின்போது பேசிய சேத்தன் சர்மா, "பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி விராட் கோலியை இந்திய கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பவில்லை. கோலியின் ஈகோவின் காரணமாகவே இருவருக்கு மத்தியிலும் பிரச்சனை ஏற்பட்டது. தன்னை கேப்டன் பதவியில் இருந்து கங்குலிதான் நீக்கியதாக கோலி கருதினார்.

கங்குலிக்கு கோலியை பிடிக்காது
கங்குலி தன்னுடைய கேப்டன் பதவியை பறித்ததாக வேண்டுமென்றே கோலி குற்றம்சாட்டினார். ஆனால், கங்குலி குறித்து விராட் கோலி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை. அதே நேரம் சவுரவ் கங்குலிக்கும் விராட் கோலியை பிடிக்காது. கேப்டன் பதவி தொடர்பாக இந்திய அணிக்கு உள்ளேயே நிறைய பிரச்சனைகள் ஓடிக்கொண்டு இருந்தன. கேப்டன் பதவிக்கான போட்டியும் அதிகமாக இருந்தது.

ரோகித் சர்மா கேப்டன் ஆன பின்னணி
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை கேப்டனாக கொண்டு வர வேண்டும் என தேர்வுக்குழுவே முடிவு செய்தது. ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக செயல்படவில்லை. விராட் கோலிக்கு மட்டுமே எதிராக செயல்பட்டோம். அந்த நேரத்தில் விராட் கோலி மோசமான ஃபார்மில் இருந்ததை வாய்ப்பாக கருதி அவரை கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்கியது.

டி20 கேப்டன் பதவி
நாட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை அவர்கள் இவ்வாறு நடத்தியது வெட்கக்கேடானது. அதே நேரம் விராட் கோலி தன்னை விளையாட்டை விட மேலானவர் என நினைத்துக்கொள்வார். அதனால் பிசிசிஐக்கும் அவருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டன. டி20 அணியின் கேப்டன் பதவியில் தொடர்வது பற்றி கோலி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு அவரிடம் கேட்டுக்கொண்டது.

தேர்வுக்குழுவில் தலையீடு
தேர்வுக்குழுவில் என்ன நடந்தது என்று அவர் தேவையில்லாமல் கேள்வி எழுப்பி இருக்கிறார். பிசிசிஐ தலைவராகவும் அவர் செயல்பட விரும்பினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். அதை தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் கேப்டன் பதவிகளில் இருந்தும் விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications