MP Election Results: 30 நாளில் ராகுல் கனவை காலி பண்ணிட்டாரே.. மத்திய பிரதேசத்தில் ஆட்டத்தை கலைத்ததே இவர்தான்!!
போபால்: மத்திய பிரதேசத்தில் வெற்றிவாய்ப்பு உள்ள கட்சியாக கருதப்பட்ட காங்கிரஸ் அங்கே படுதோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த முறை தேர்தலில் எடுத்த 114 இடங்களை விட குறைவான இடங்களை.. கிட்டத்தட்ட பாதிக்கு பாதி குறைவான இடங்களை எடுத்து படுதோல்வி அடையும் நிலைக்கு காங்கிரஸ் சென்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக பாஜக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அங்கே 230 இடங்களில் பாஜக 162 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.
5வது முறையாக மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியே அங்கு அமையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அங்கே தொடக்கத்தில் காங்கிரசுக்கு ஆதரவாகவே சூழ்நிலை இருந்தது.
( பஸ் கம்பியை பிடிக்காமல்.. நிற்கும் வடிவேலு போல தனியாக நின்று வீழ்ந்த காங். )
சிவராஜ் ஆட்சி கடைசியில் முடிய போகிறது.. அவ்வளவுதான். காங்கிரஸ் அந்த இடத்தை பிடிக்க போகிறது என்று தொடக்க கால கணிப்புகள் கூட கூறின. ஆனால் இன்று நிலைமையே வேறு மாதிரி உள்ளது. கடைசி 30 நாட்களில் அங்கே மாமா ஜி ஆடிய ஆட்டம்தான் ரிசல்ட்டை மாற்றி உள்ளது.

டி 20 போட்டிகளில் ரிங்கு சிங் வந்து கடைசியில் மேட்சை மாற்றுவது போல மாமா ஜி ஆட்டத்தை மாற்றி உள்ளார். மாமா ஜி என்றால் அம்மாநில முதல்வர் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான்தான். தொண்டர்களால் மாமா ஜி என்று அழைக்கப்படும் இவர் (இங்கே அம்மா , தளபதி, வங்கத்தில் தீதி போல இவர் மாமா ஜி) செய்த பணிகள் அங்கே தேர்தல் முடிவை மாற்றி உள்ளது.
கடைசி 30 நாளில் நடந்தது என்ன?:
1. அங்கே காங்கிரஸ் பிரச்சாரம் தொடக்கத்தில் சிறப்பாக இருந்தது. ஆனால் போக போக பிரச்சாரம் சறுக்கியது. முக்கியமாக கடைசி 30 நாட்கள் பாஜகவின் சவுகான் நேரடியாக பிரச்சாரத்தை கவனித்தார்.
2. மத்திய பிரதேச பிரச்சாரம் மோடியை மையப்படுத்தி இல்லை. கர்நாடகா போல மோடியை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யப்படவில்லை. மாறாக சவுகானை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.
3. மாமா ஜி என்று அழைக்கப்படும் சவுகான்.. களப்பணியில் அதிக கவனம் செலுத்தினார். சமூக வலைத்தளங்களில் இருந்ததை விட கிரவுண்ட் வொர்க்கில் அந்த கட்சி அதிகம் கவனம் செலுத்த இவரின் திட்டமிடல் காரணம்.
4. டெல்லி மேலிடமே இவரை ஓரம்கட்ட கொஞ்சம் தீவிரமாக முயன்றது. இவருக்கு இடம் கொடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் டெல்லி மேலிடத்திற்கு இருந்தது. .. ஆனால் நீங்க கொடுங்க.. கொடுக்கமா போங்க என்று இவர் தேர்தல் வியூகங்களில் கவனம் செலுத்தினார்.
5. சவுகான் கடைசி கட்டத்தில் நடத்திய கூட்டங்கள் மூலம் நிறைய புதிய பூத் கமிட்டியை உருவாக்கி அதை வலிமைப்படுத்தினார்.
6. காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகளில் போதிய பூத் கமிட்டிகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கு இடம் கொடுக்காமல் பாஜகவின் அடிப்படை கட்டமைப்பை அங்கே வலிமை செய்தார் மாமாஜி என்னும் சவுகான்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications