பஸ் கம்பியை பிடிக்காமல்.. நிற்கும் வடிவேலு போல தனியாக நின்று வீழ்ந்த காங். "இந்தியா" அருமை புரியுதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பிரதேசத்தில் கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்து.. சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டு உள்ளது. தனியாக நின்று பலத்தை காட்டலாம் என்று நினைத்த காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் முடிவுகள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக பாஜக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அங்கே 230 இடங்களில் பாஜக 157 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 72 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும்.

அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

இந்தியா கூட்டணி: நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன. . மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, சரத் பவார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கூட்டணியில் கரம் கோர்த்து உள்ளனர்.

( ஒன்றல்ல.. இரண்டல்ல.. 5வது முறை.. காங்கிரஸை நாக் அவுட் செய்த பாஜக? அப்போ 2024ல் மீண்டும் மோடிதான்?)

காங்கிரஸ் தனியாக நின்றது: ஆனால் மகாராஷ்டிராவில் கூட்டணியை சட்டசபை தேர்தலில் தொடர காங்கிரஸ் விரும்பவில்லை. அங்கே வலுவாக இருக்கும் பகுஜன் சமாஜ் உடனே கூட்டணி இல்லை. இந்திய கூட்டணியில் பகுஜன் சமாஜ் இல்லை.

Congress will understand the importance of India alliance after Madhya Pradesh Election 2023 results

குறைந்தபட்சம் இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு முன்பு வரை கூட சமாஜ்வாதி அங்கே காங்கிரஸ் கூட்டணியில் சீட்டு கேட்டு வந்தது.

20 இடங்களில் போட்டியிட வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டது. ஆனால் சமாஜ்வாதியின் கோரிக்கைக்கு காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை. இந்தியா கூட்டணி எல்லாம் லோக்சபா தேர்தலுக்கான, சட்டசபை தேர்தலுக்கு இல்லை என்பது போல காங்கிரஸ் நடந்துகொண்டது.

சூடு போட்டுக்கொண்டது; நாங்கள் தனியாகவே ஜெயித்துவிடுவோம் என்பது போல மிக நம்பிக்கையாக பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் களமிறங்கியது. சொந்த காசில் காங்கிரஸ் வைத்துக்கொண்ட சூனியம் இது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் ஓபிசி வாக்குகள், யாதவ் வாக்குகள் கணிசமாக உள்ளன.

சமாஜ்வாதி உடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் பாஜகவை அங்கே காங்கிரஸ் எளிதாக எதிர்க்க முடியும். மிக அதிக அளவு வாக்குகளை பிரிக்க முடியும். முக்கியமாக யாதவ், திவாரி வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க முடியும்.

ஆனால் நின்னா தனியாதான் நிற்பேன்.. என்று பஸ் கம்பியை பிடிக்காமல் நின்று பேருந்தில் கீழே விழும் வடிவேல் போல கீழே விழுந்துள்ளது. 2024 தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா கூட்டணியின் முக்கியத்துவத்தை இந்த தேர்தல் விளக்கி உள்ளது. காங்கிரசுக்கு கண்ணை திறக்கும் பாடமாக இந்த மத்திய பிரதேச தேர்தல் அமைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+