அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் எண்ணிக்கை எவ்வளவு? எந்த மாநிலத்தவர்கள் அதிகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்கவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இன்று 205 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் எத்தனை பேர் உள்ளனர்.. எந்த மாநிலத்தவர்கள் அதிகம் என்ற விவரங்களை பார்க்கலாம்.

அமெரிக்காவில் ஆவணங்கள் இன்றி அதிக அளவு வெளிநாட்டு மக்கள் குடியேறி உள்ளனர். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்ற போவதாக டிரம்ப் கூறிவந்தார். இந்த நிலையில் அதிபராக பதவியேற்ற பிறகு சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை டிரம்ப் எடுத்து வருகிறார்.

america donald trump world

அமெரிக்காவில் 4 நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் அகதிகளாக தங்கியுள்ளனர். கொலம்பியா மக்கள், மெக்சிகோ மக்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் அதிக அளவில் அங்கே ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். இவர்களை எல்லாம் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. அங்கே உள்ளே அகதிகளை, அத்துமீறி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றும் பொருட்டு அங்கே ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது.

இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து சட்ட விரோதமாக தங்கியிருந்த கொலம்பிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை எடுத்தார். இந்த நிலையில் தான், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணியை டிரம்ப் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

சி 14 ரக ராணுவ விமானத்தில் ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 205 இந்தியர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 2022 வரை சுமார் 7,20,000 சட்டவிரோத இந்தியர்கள் அமெரிக்காவில் வசித்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 1,100 இந்தியர்கள் நாடு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களில் மூன்று சதவீதம் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+