"அணு குண்டுகள்.." இந்தியாவிடம் வாலாட்டவே கூடாது.. அது சரி பாகிஸ்தானிடம் எத்தனை அணுகுண்டு இருக்கு
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், உலக நாடுகளின் பார்வை இந்தியா பாகிஸ்தான் மீது தான் உள்ளன. இரு நாடுகளிடமும் இருக்கும் அணு ஆயுதங்களே அதற்குக் காரணம். உலக நாடுகள் உற்றுக் கவனிக்க என்ன காரணம்.. இந்தியா பாகிஸ்தானிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஒட்டுமொத்த உலக நாடுகளும் இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானைத் தான் உற்றுக் கவனித்து வருகின்றன. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனென்றால் இரு நாடுகளுமே அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளாகும். அணு ஆயுத நாடுகள் மோதிக் கொள்வது எப்போதும் ஆபத்தான ஒரு விஷயமாகவே பார்க்கப்படும். ஏனென்றால் அணுக் குண்டு ஏற்படும் பாதிப்பு நமக்குத் தெரியும்.

அணு ஆயுதங்கள்
உலகில் இதுவரை இரண்டு முறை மட்டுமே அணுக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.. இரண்டுமே இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தான்.. அப்போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்கப் படைகள் அணு குண்டுகளை வீசின, 1945ம் ஆண்டு ஹிரோஷிமா மீது அமெரிக்கப் படைகள் "லிட்டில் பாய்" அணு குண்டை வீசியது. மூன்று நாள் இடைவெளியில் ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் "ஃபேட் மேன்" வீசப்பட்டது.
என்ன காரணம்!
உலகிலேயே போர் சமயத்தில் அணு குண்டுகள் முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டதும் இதில் தான்.. கடைசி முறையும் இதுதான். ஏனென்றால் அணு குண்டுகள் மற்ற ஆயுதங்களை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் கனவிலும் எதிர்பார்க்காத அளவுக்கு மோசமான பாதிப்பு இருக்கும். அணு குண்டுகளில் கதிரியக்கப் பாதிப்பும் ஏற்படும் என்பதால் தலைமுறைகள் கடந்தும் பாதிப்புகள் ஏற்படும். ஜப்பானிலேயே இதை நாம் பார்த்திருப்போம். இதன் காரணமாகவே அதன் பிறகு அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
9 நாடுகள் மட்டுமே
மேலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்ற ஆயுதங்களை விற்கும். ஆனால், அணு குண்டுகளின் பாதிப்பு தெரிந்ததால் அதைக் கொடுக்க மாட்டார்கள். மேலும், அணு ஆயுதங்களை உருவாக்குவதும் எளிதாகக் காரியம் இல்லை. அதற்கு மிகவும் மேம்பட்ட திறன் வேண்டும். தற்போது வரை 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வட கொரியா நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.
இந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் ஏன் இதை இந்த நாடுகள் வைத்துள்ளன என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. தேசியப் பாதுகாப்பு தான் அதற்குக் காரணம். பொதுவாகவே அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு என்றாலே மற்ற நாடுகளுக்கு ஒரு பயம் இருக்கும். இதனாலேயே உலக நாடுகள் இதை வைத்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில் தேசியப் பாதுகாப்புக்குச் சுமார் 100 அணு ஆயுதங்கள் இருந்தாலே போதும்.
அமெரிக்கா vs ரஷ்யா
அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்திடம் தான் இடையே தான் பனிப்போர் சமயத்தில் அதிகபட்ச அணு ஆயுதங்கள் இருந்தன. பிறகு இரு நாடுகளும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டன. பாதுகாப்பு காரணங்களால் எந்த நாடும் தங்களிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன என்பதைச் சொல்ல மாட்டார்கள். அதேநேரம் எஃப்.ஏ.எஸ் என்ற சர்வதேச அமைப்பு பல்வேறு தகவல்களை ஆய்வு செய்து எந்த நாட்டிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன என்ற தகவலைப் பகிர்ந்துள்ளன.
இந்தியா vs பாகிஸ்தான்
அதில் அதிகபட்சமாக ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் தலா 5000+ அணு ஆயுதங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சீனாவிடம் 600 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிடம் முறையே 290 மற்றும் 225 அணு ஆயுதங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவிடம் 180 அணு ஆயுதங்களும் பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் உள்ளன.
இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருந்தாலும் கூட அதைப் பயன்படுத்த வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஏனென்றால் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தும் நாட்டின் மீது நிச்சயம் உலகின் ஒட்டுமொத்த நாடுகளும் திரும்பும். மேலும், அது உலகப் போரையும் கூட ஆரம்பித்துவைக்கும்.
-
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications