Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தம் 140+ எம்பிக்கள் சஸ்பெண்ட்.. இப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் எத்தனை பேர் எஞ்சியுள்ளனர்? பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் இருந்து இதுவரை 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது அவையில் எத்தனை எம்பிக்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நுழைந்த சிலர் புகை வரும் குண்டுகளை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடாகப் பார்க்கப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 How Many Opposition MPs Are Left In Parliament After Record Suspensions

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இப்போது நாடாளுமன்றம் நடக்கும் நிலையில், இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மொத்தம் 141 பேர் சஸ்பெண்ட்:
அவை தலைவர் அமைதியாக இருக்க பல முறை சொல்லிய போதிலும், அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக இன்று மட்டும் 49 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்றைய தினம் லோக்சபாவில் 33 எம்.பி.க்கள், ராஜ்யசபாவில் 45 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக கடந்த வாரம் தான் 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் எண்ணிக்கை 141ஆக உயர்ந்துள்ளது.

வரலாற்றிலேயே இதுவரை இல்லை.. இன்று மட்டும் 50 லோக்சபா எம்.பிக்கள் சஸ்பெண்ட்! மொத்தமாக 142 பேர் காலி!


இவர்கள் அனைவரும் எஞ்சிய குளிர்கால கூட்டத்தொடர் முழுக்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குளிர்கால கூட்டத்தொடருக்கு நிறைவடைய இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், இது மிக முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும், முக்கிய மசோதா எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்பதாலேயே இவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சியது எத்தனை பேர்: லோக்சபாவை பொறுத்தவரை 300+ எம்.பி.,க்கள், பாஜக அல்லது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இப்போது சுமார் 100 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், வெகு சில எம்பிக்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதேபோல ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளில் இருந்து 160 எம்பிக்கள் இருக்கும் நிலையில், அவர்களில் 100க்கும் குறைவானவர்கள் மட்டுமே அவையில் உள்ளன.

இப்போது அவையில் இருக்கும் பெரும்பாலான எம்பிக்களும் கூட ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இல்லை. அதேபோல ஆளும் பாஜக கூட்டணியிலும் இல்லை.. மேலும், பல்வேறு விஷயங்களில் அவர்கள் பாஜகவை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சஸ்பெண்ட்:
இன்றைய தினம் காங்கிரஸின் சசி தரூர் மற்றும் கார்த்தி சிதம்பரம், என்சிபியின் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் மற்றும் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சசி தரூர் சாடியுள்ளார்.

நேற்றைய தினம் லோக்சபாவில் இருந்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் இருந்து ஆ ராசா, தயாநிதி மாறன், கணேசன் செல்வம், சி.என். அண்ணாதுரை, தமிழச்சி தங்கபாண்டியன் என மொத்தம் 33 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல ராஜ்யசபாவில் இருந்து ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் என மொத்தம் 45 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+