உலகமே வியந்து பார்க்கும் அம்பானி வீட்டு திருமணம்.. செலவு எவ்வளவு தெரியுமா? அம்மாடி தலையே சுத்துதே
டெல்லி: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் இப்போது மும்பையில் நடக்கிறது. ஊரே வியக்கும் வகையில் நடக்கும் இந்த திருமண கொண்டாட்டங்களுக்கு எந்தளவுக்குச் செலவாகி இருக்கிறது என்பது தெரிந்தால் உங்களுக்குத் தலையே சுற்றிவிடும். ஆனாலும், இது எளிமையான திருமண விழா தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. வாங்க இது குறித்துப் பார்க்கலாம்.
இப்போது எந்தவொரு சமூக வலைத்தளத்தை ஓபன் செய்தாலும் அதில் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணக் கொண்டாட்டங்கள் குறித்தே அதிகம் பேசப்படுகிறது.

திருணத்திற்கு முந்தைய நிகழ்வு தொடங்கிப் பல மாதங்களாக நடந்த இந்த திருமண விழாக்கள் இந்தியாவைத் தாண்டி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என நாம் யோசிக்காமல் சொல்லலாம்.
திருமணம்: பல மாதங்களாக நடந்த இந்த விழாக்கள் இந்தியா மட்டுமன்றி சர்வதேச கவனத்தை ஈர்த்தது. பிரபல பாப் பாடகர் ரிஹானா மற்றும் ஜஸ்டின் பீபர் போன்றவர்களும் அம்பானி வீட்டுத் திருமணத்தில் பாடல்களைப் பாடினர். கடந்த மார்ச் மாதம் குஜராத்தின் ஜாம்நகரில் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நடந்த நிலையில், இப்போது மகாராஷ்டிராவின் மும்பையில் திருமணம் நடக்கிறது.
அம்பானி வீட்டுத் திருமணத்தில் கிம் கர்டாஷியன், ஜான் சீனா தொடங்கிப் பல சர்வதேச பிரபலங்களும் மும்பைக்கு விந்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்த அம்பானி வீட்டுத் திருமணத்திற்கு எவ்வளவு செலவாகி உள்ளது என்பது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
எவ்வளவு செலவு: ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு ரூ. 4,000-5,000 கோடி செலவாகி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த தொகை பார்க்க மிக மிக அதிகமாகவே பலருக்கும் தோன்றும். ஆனால், உண்மையில் சராசரி இந்தியக் குடும்பங்கள் தங்கள் நிகர சொத்து மதிப்பில் எவ்வளவு தொகையைத் திருமணத்திற்குச் செலவு செய்கிறார்களோ அதை விட அம்பானி தனது செல்வத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே திருமணத்திற்குச் செலவு செய்கிறார்.
கம்மி தான்: அதாவது இந்த ரூ. 4,000-5,000 கோடி என்பது அம்பானியின் நிகர சொத்து மதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப் பார்க்கும் போது அம்பானி வீட்டுத் திருமணம் எளிமையாக நடக்கிறது என்றே சொல்லலாம். மேலும், இந்த தொகை என்பது 10 ஆஸ்கர் நிகழ்ச்சிகளை நடத்த போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் இந்த செலவு எல்லாமே ஆடம்பர செலவுகளாக மட்டுமே செலவிடப்பட்டது எனச் சொல்ல முடியாது. திருமண கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு பால்கரில் உள்ள சுவாமி விவேகானந்த் வித்யாமந்திரில் ஏழைகளுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்குச் சீதனத்தையும் அம்பானி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அம்பானி வீட்டுத் திருமணம்: இன்று ஜூலை 12ஆம் தேதி அம்பானி வீட்டுத் திருமணம் தொடங்குகிறது. விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய ஆடைகளை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜூலை 13, சனிக்கிழமையன்று ஷுப் ஆஷிர்வாத்துடன் கொண்டாட்டங்கள் தொடரும். இறுதி நிகழ்வான மங்கள் உத்சவ் அல்லது திருமண வரவேற்பு, ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications