"ரூ.17,500 இல்ல, அதுக்கும் மேல.." வருமான வரியில் இப்போது எவ்வளவு சேமிக்க முடியும்? இதை நோட் பண்ணுங்க
டெல்லி: நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக வருமான வரி சார்ந்த அறிவிப்புகள் அதிக கவனம் பெற்றது. நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு மூலம் மாத சம்பளதாரர்கள் அதிகபட்சம் ரூ.18,200 வரை சேமிக்க முடியும். அது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் மூலதன ஆதாயங்களின் வரிவிதிப்பு மற்றும் டிடிஎஸ் தாக்கல் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பட்ஜெட்: குறிப்பாக மாத சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நிலையான கழிவுத்தொகை, அதாவது விலக்கு தொகை ₹ 50,000 லிருந்து ₹ 75,000 ஆகவும், ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விலக்கு ₹ 15,000 லிருந்து ₹ 25,000 ஆகவும் உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம் சுமார் நான்கு கோடி பேர் பயனடைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 17,500 வரை சேமிக்க முடியும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இதற்கிடையே இதைச் சரியாகப் பயன்படுத்தினால் ஆண்டுக்கு ₹ 18,200 வரை கூட சேமிக்க முடியும் என்று பிஐபி இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.. சம்பளதாரர்கள் எவ்வளவு தூரம் பணத்தைச் சேமிக்க முடியும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
எவ்வளவு: ஆண்டு வருமானம் ₹ 10 லட்சமாக இருந்தால், ஏற்கனவே இருக்கும் வரி முறையில் வரி = ₹ 54,600 வரி செலுத்த வேண்டி இருக்கும். அதேநேரம் புதிய முறை அமலுக்கு வரும் போது ₹ 44,200 செலுத்தினால் போதும். இதன் மூலம் 10,400 ரூபாய் சேமிக்க முடியும். அதேபோல ஆண்டு வருமானம் ₹ 15 லட்சமாக இருந்தால் ஏற்கனவே உள்ள வரி முறையில் ரூ.1.45 லட்சம் வருமானமாகச் சேமிக்க முடியும். அதேநேரம் புதிய மாற்றங்கள் அமலுக்கு வரும் போது ரூ. 1.30 லட்சம் மட்டுமே வரி செலுத்தினால் போதும். இதன் மூலம் ரூ. 15,600 சேமிக்க முடியும்.

ரூ.18,200 வரை சேமிக்க முடியும்: ஆண்டு வருமானம் வருமானம் ₹ 20 லட்சமாக இருந்தால் ஏற்கனவே உள்ள வரி முறையில், ரூ.2.96 லட்சம் வரி செலுத்த வேண்டி இருக்கும். அதேநேரம் புதிய வரி முறை அமலுக்கு வந்தால் ரூ. 2.78 லட்சம் மட்டுமே வரி செலுத்தினால் போதும். இதன் மூலம் நாம ரூ. 18,200 சேமிக்க முடியும். மேலும், ஆண்டு வருமானம் ரூ. 25 லட்சமாக இருந்தால் தற்போதுள்ள வரி நடைமுறையில் ரூ.4.52 லட்சம் செலுத்த வேண்டும். அதேநேரம் புதிய வரி முறை அமலுக்கு வரும் போது ரூ.4.34 லட்சம் மட்டுமே வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும். இதன் மூலம் ரூ.18,200 வரை சேமிக்க முடியும்.
வருமான வரி: மேலும், நமது நாட்டில் புதிய வருமான வரி முறையிலும் சிறிய மாற்றம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்டுக்கு 3 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வழக்கம் போல வரி இல்லை. அடுத்து அடுக்கில் ரூ. 3 லட்சம் - ரூ 6 லட்சம் பெறுவோருக்கு 5% வருமான வரி என்று இருந்த நிலையில், அது இப்போது ரூ 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல ரூ. 9 லட்சம் வரை சம்பளம் பெறுவோருக்கான வரி 10%ஆக இருந்த நிலையில், அதன் உச்ச வரம்பும் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து ரூ. 10 லட்சம் - ரூ 12 லட்சம் பெறுவோருக்கு 15% வரியும் ரூ. 12 லட்சம் - ரூ 15 லட்சமாக இருந்தால் 20% வரியும் ரூ. 15 லட்சத்திற்கு மேல் என்றால் 30% வரியும் செலுத்த வேண்டும். இதில் எந்தவொரு மாற்றங்களும் அறிவிக்கப்படவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications