Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அக்கு அக்கா" உரிந்த உறுப்புகள், நசுங்கிய உடல்கள்.. எல்லாத்துக்கும் காரணம் "அதுவா".. சீறும் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டையே நடுநடுங்க செய்யும் ரயில் விபத்துக்கு என்ன காரணம் என்ற கேள்வி இணையத்தை துளைத்தெடுத்து வருகின்றன.. இதுகுறித்த விசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருந்தாலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. மற்றொருபக்கம், விபத்து குறித்த வீடியோக்களும், போட்டோக்களும், இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளதால், நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்து விக்கித்து போய் உறைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விடிய விடிய மீட்புப் பணிகள் நடந்துள்ளன.. இன்றும் 2வது நாளாகவும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.

விபத்து நடந்தது வனப்பகுதி என்கிறார்கள். இருட்டு நேரமும் என்பதால், மீட்பு பணிகள் தாமதமானதாக தெரிகிறது. எனினும் இரவு நேரத்தில், சடலங்களை மீட்பு பணி என்பது மிகவும் சவாலாக இருந்திருக்கிறது.

மீட்பு படை: தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 3 ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

how odisha train accident tragedy happened and What are the oppositions allegations

இந்நிலையில், ரெயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது... இந்த விபத்தில் 2 பயணிகள் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ரெயில்வேயின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சர்மா தெரிவித்திருக்கிறார்..

தடம்புரண்டது: சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ், தடம் புரண்டு சரக்கு ரெயிலில் மோதியதில் பல பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளன. அப்போது, யஸ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. விபத்து நடந்தபோது 2 ரயில்களும் அதிவேகத்தில் சென்றன. மேலும், நேற்று மாலை 6.50 முதல் 7.10 மணிக்குள் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மற்றொருபக்கம், எதிர்க்கட்சிகள் இதற்கு வேறு காரணங்களை குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.. இது இந்தியாவில் நடந்த 3-வது மிகப்பெரிய ரயில் விபத்தாக கருதப்படும்நிலையில், மிகப்பெரிய கண்டனங்களையும் தாங்கி வருகிறது..

கேள்விகள்: குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள், விபத்துக்குக் காரணமாக கூறப்படும் ரயில்வேயின் சிக்னல் அமைப்பு குறித்து கேள்விகளை எழுப்ப துவங்கி உள்ளனர்.. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே இதுகுறித்து சொன்னதாவது:

"ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் & யஷ்வந்த்பூர்-ஹவுரா ரயில் விபத்து குறித்த மோசமான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த பிரார்த்தனைகள். சிக்னல் செயலிழந்ததால் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சியளிக்கிறது.. இது தொடர்பாக ரயில்வே தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.

காரணம் என்ன: சிபிஐ (எம்எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவும் இதுகுறித்து இதே போல கேள்வியை எழுப்பியிருக்கிறார்.. இந்திய ரயில்வேயில் சிக்னல் மற்றும் பாதுகாப்பு அமைப்பு இல்லையா? அல்லது இதுபோன்ற பயங்கரமான துயரங்கள் இந்தியாவில் ரயில் பயணத்தில் புதிய இயல்பானதாக மாறுமா?பாதிக்கப்பட்டவர்களுக்கும், இதில் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கும் நாம் விபத்துக்கான காரணம் பற்றி பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

how odisha train accident tragedy happened and What are the oppositions allegations

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ ஒரு படிமேலே போய், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது.. அக்கட்சியின் எம்பி பினோய் விஸ்வம் இதுகுறித்து சொல்லும்போது, "சொகுசு ரயில்களில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. சாதாரண ரயில்களும், சாமானியர்களின் பாதைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. அதன் விளைவுதான் ஒடிசாவின் மரணங்கள். அதேனால், ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கேட்டுள்ளார்.

சிக்னல் பிரச்சனை: இதற்கு நடுவில், இந்த விபத்தில் இருந்து உயிர்பிழைத்த சில பயணிகள், தங்கள் அனுபவங்களை அதிர்ச்சி விலகாமல் சொல்லி வருகிறார்கள்.. அந்த பேட்டிகளில், இந்த விபத்துக்கு அவர்கள் சொல்லும் காரணம், சிக்னல் பிரச்சனைதான் என்கிறார்கள்.. 3 ரயில்களும் ஒன்றோடு ஒன்று மோதும் என்பது இதுவரை நடந்த சம்பவம் கிடையாது.. சிக்னல் பிரச்சனைதான் இது என்றும் கூறுகிறார்கள்.

இந்த ரயில் விபத்துக்கு உறுதியான மற்றும் அதிகாரப்பூர்வமான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், மிகப்பெரிய அதிர்வலையை கோர மரணங்கள் ஏற்படுத்தி வருகிறது.. மற்றொருபக்கம், உலுக்கி எடுத்த இந்த விபத்தின் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை தந்து கொண்டிருக்கிறது..

தூக்கம்: ரயிலில் நேற்றிரவு 7 மணியளவில், பயணிகள் பலர் தூங்கி கொண்டிருந்தார்களாம்.. தூக்கத்திலேயே சிலரது உடல்கள் நசுங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.. விபத்தில் சிக்கி குடும்பங்கள் சுக்குநூறாக நொறுங்கியதாகவும், கைகால்கள் இல்லாமலும், சிதைந்த நிலையிலும் பல உடல்களும் சிதறிக்கிடந்தன என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்லி வருகிறார்கள்.

நசுங்கிய உடல்கள்.. கைகள், கால்கள் இல்லாத உடல்கள், ரத்தக்கறை நிறைந்த தண்டவாளங்கள் என்று நான் கண்ட காட்சிகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நான் தனிப்பட்ட முறையில் 200 - 250 இறந்தவர்களின் உடல்களை பார்த்தேன் என பயணிகள் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்..

கலக்கம்: கொடூர விபத்தின் தாக்கம் அதிகரித்து இருப்பதும், ரயில் சிதிலங்களிடையே மீட்கப்படுவோர் நிலைமை மோசமாக இருப்பதும், உயிர்ப்பலி மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி வருவது மேலும் பதற்றத்தையும், கலக்கத்தையும் அதிகரிக்க செய்து வருகின்றன.

இந்த கோர விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனிதத் தவறா? என்ற கேள்விகள் இணையத்தை வட்டமிட்டு கொண்டிருக்கின்றன.. குறிப்பாக, ஒரே இடத்தில், அதுவும் ஒரே நேரத்தில், அதுவும் 3 ரெயில்கள் எப்படி மோதியது என்பதுதான், அனைவரின் கேள்வியாக உள்ளது.

how odisha train accident tragedy happened and What are the oppositions allegations

சிக்னல்கள்: இந்திய ரயில்வேயில், அனைத்து இடங்களிலுமே சிக்னல்கள் இல்லையா? அல்லது பாதுகாப்பு அமைப்பு இல்லையா? நவீன இந்தியாவில், ரயில்வேயில் உள்ள அடிப்படை வசதிகள் இல்லாதது எப்படி? சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்ததாக சொல்லும்போது, அதே ரெயில்பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பின்னாடியே வந்தது எப்படி?

ரெயில்வே அமைச்சகம் விபத்துகளை தடுப்பதற்கான 'கவச்' சிஸ்டத்தை செயல்படுத்தி வருகிறது...ஆனால், விபத்து நடந்த வழித்தடத்தில் "கவாச்" சிஸ்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என்று ரெயில்வேதுறை செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா விளக்கம் தந்துள்ளார்..

ஏன் பொருத்தவில்லை: தொழில்நுட்பம் பெருகி வரும்நிலையில், இந்த கவச் சிஸ்டத்தை ஏன் பொருத்தவில்லை? கடந்த 2022 மத்திய பட்ஜெட்டில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும்கூட, பொருத்தப்படாமலேயே இருந்தது ஏன்? என்ற கேள்விகள் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+