"செக்ஸ் அடிமை.." ஐஐடி மாணவரை கட்டி வைத்து.. பக்கத்திலேயே மனைவி வேறு! இருவரும் சேர்ந்து பகீர் காரியம்
பிளாக் மெஜிக் என்று சொல்லி ஐஐடி மாணவருக்கு மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி: பிரபல டேட்டிங் செயலி வழியே பழக்கமான ஒருவரை நேரில் பார்க்கச் சென்ற ஐஐடி மாணவருக்கு மிக மோசமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இது தொடர்பான பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நவீன உலகில் அனைத்துமே ஆன்லைன் என்றாகிவிட்டது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் பெற முடிகிறது. டேட்டிங் தொடங்கி இப்போது ஷாப்பிங் வரை அனைத்துமே ஆன்லைனில் தான் நடக்கிறது.
அதிலும் உணவு டெலிவரி உள்ளிட்ட சில துறைகள் ஆன்லைன் வருகையால் முற்றிலுமாக மாறிவிட்டது என்றே கூடச் சொல்லலாம். சுடசுட ஆர்டர் செய்யப்பட்ட உணவு வீடுகளுக்கு வந்துவிடுவதே இதற்குக் காரணம்.

ஆன்லைன் டேட்டிங்
அப்படி முற்றிலுமாக மாறிய மற்றொன்று டேட்டிங்.. ஆன்லைன் செயலிகளின் வருகைக்குப் பின் டேட்டிங் முறையே முற்றிலுமாக மாறிவிட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களிலும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சில நொடிகளில் நமக்குப் பிடித்த நபரை வலதுபுறம் ஸ்வைப் செய்தால் போதும்.. அவர்களும் அதேபோல செய்தால் டேட்டிங் ஓகே ஆகிவிடும்.

டேட்டிங்
இதனால் டேட்டிங் செயலிகள் இந்தியாவில் ஹிட் அடித்துவிட்டது. இருப்பினும், இதுபோன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் அறிமுகமாகும் நபர்களைச் சந்திக்கச் செல்லும் முன்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பலரும் எச்சரிக்கின்றனர்.. இதற்கிடையே ஆன்லைன் மூலம் டேட்டிங் சென்ற ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. ஐஐடி மும்பையில் முனைவர் படிப்பைப் படிக்கும் மாணவர் ஒருவர் தான் இந்த புகாரை அளித்துள்ளார்.

ஐஐடி மாணவர்
33 வயதான அந்த ஐஐடி மாணவருக்கு கிரிண்டர் செயலி மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. கிரிண்டர் செயலி என்பது தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் ஒரு டேட்டிங் செயலியாகும். குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு மனைவியும் இருந்துள்ளார். இருப்பினும், இந்த இளைஞருடன் கிரிண்டர் செயலியில் நன்கு பேசிய அந்த நபர் ஒரு நாள் வீட்டிற்கு வரச் சொல்லியுள்ளார். நன்கு பேசுகிறார்.. மேலும் வீட்டிற்கு தானே வரச் சொல்கிறார் என்று நம்பி இவரும் அங்குச் சென்றுள்ளார்.

பாலியல் அடிமை
ஆனால், அங்கு நடந்த சம்பவம் தான் இவருக்குப் பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது.. அதாவது அங்குச் சென்றவுடன் அந்த தம்பதி, இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டுள்ளனர். மேலும், அவரை ஒரு பாலியல் அடிமையாக மாற்றி, மிரட்டிப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், கொலை செய்யும் வகையில் கழுத்தையும் நெறித்தும் டார்ச்சர் செய்துள்ளனர். இன்னும் சில நொடிகள் கழுத்தை நெறித்திருந்தால்.. அவர் உயிரிழந்திருக்கவே கூடும் என்று என்கிறார்.

வழக்குப்பதிவு
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த தம்பதி நல்ல நிறுவனத்தில் நல்ல வேலையில் பணிபுரிந்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த நபர் மும்பை போலீசாரிடம் புகாரும் அளித்துள்ளார். அந்த ஜோடி இயற்கைக்கு மாறான முறையில் தன்னுடன் உறவு கொண்டதாகவும் கைகள் மற்றும் கழுத்தைக் கட்டி வைத்து.. உடலின் பல பாகங்களை எரித்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அந்த தம்பதி மீது கொலை முயற்சி, இயற்கைக்கு மாறான உறவு, பிளாக் மேஜிக் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது
இதுகுறித்து மூத்த போலீஸ் ஆய்வாளர் புதன் சாவந்த் கூறுகையில், "புகாரின் அடிப்படையில் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரைக் கைது செய்துள்ளோம். அவரது மனைவியை நாங்கள் கைது செய்யப்படவில்லை.. இந்த குற்றச் சம்பவத்தில் அவரது பங்கு எந்தளவுக்கு இருந்தது என்று தெரியவில்லை. இதனால் அவரை நாங்கள் கைது செய்யவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர் ஐரோப்பாவில் இருந்தார். அவர் அங்கிருந்து மும்பை திரும்பியவுடன் கைது செய்தோம்" என்றார்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications