பிசிசிஐ டூ ஆலியா பட்.. கோடீஸ்வரர்கள் வரி கட்டாமல் தப்புவது எப்படி? சட்டத்தில் இத்தனை ஓட்டை இருக்கா
டெல்லி: இந்தியாவின் ஏழைகளும் நடுத்தர மக்களும் நாட்டின் வரியில் பெரும் பங்களிப்பை செலுத்தி வரும் நிலையில், பெரும் பணக்காரர்கள் எப்படி எளிதில் வரி விலக்கு பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.
ஒருநாடும் அரசாங்கமும் முறையாக செயல்படுவதற்கு அத்தியாசவசியமானதாக இருப்பது வரி. நடுத்தர மக்கள் ஏழை மக்கள் வருமான வரி, பொருட்கள் வாங்குவது, சேவைகளை பயன்படுத்துவது என பல லட்சம் கோடிகளை மறைமுக வரியாக செலுத்தி வருகிறார்கள். அதே நேரம் பல கோடி சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் வரி செலுத்தினாலும், சட்டத்தில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பல்வேறு வகைகளில் வரிகளை செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுகிறார்கள்.

குறிப்பாக வரி விலக்கு பெற தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வது, வேறு மக்கள் நல உதவிகளை செய்வது போன்றவற்றின் மூலம் வரி விலக்கு பெறுகிறார்கள். அதேபோல பல கோடி வருவாய் ஈட்டி வரும் நிறுவனத்தை தொண்டு நிறுவனமாக பதிவு செய்து வரி செலுத்தாமல் தப்பிக்கின்றன. இவ்வாறு விலக்கு பெறும் முறையில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டால் நாட்டுக்கான வரி வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சில பிரபலங்கள் எப்படி வரிகளை செலுத்துவதில் விலக்கு பெறுகிறார்கள் என்ற விபரத்தை பார்ப்போம்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான், ரூ.12.91 கோடி மதிப்பில் 3 வீடுகளை வாங்கினார். அதில் இருந்து வரி விலக்கு பெற அவர் தன்னை ஒரு விவசாயி என்று கூறிக்கொண்டார். நடிகர் ஷாரூக் கானின் மாமியார் மற்றும் அண்ணி நடத்தி வரும் தேஜாவு ஃபார்ம் நிறுவனத்தை காட்டி சுஹானா கானால் விவசாயியாக மாற முடிந்தது.
பாலிவுட் நடிகை ஆலியா பட், ரூ.37.8 கோடி மதிப்பில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார். ஆனால், அது அவர் பெயரில் அல்ல. அவர் நடத்தி வரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பெயரில். இதனால் அவருக்கு 25 சதவீத வரி விலக்கு கிடைத்தது. அதேபோல், மகாராஷ்டிராவில் மகளிருக்கு 1 சதவீதம் வரி விலக்கு இருப்பதையும் அவர் பயன்படுத்திக்கொண்டார்.
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் நடிகை ஆதியா ஷெட்டி திருமணத்துக்கு ரூ.55 கோடி மதிப்பில் அன்பளிப்புகள் கிடைத்தன. ஆனால், இதற்கு எந்த வரியும் கிடையாது. காரணம், திருமண அன்பளிப்புகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ரூ.24,195 கோடி வருவாயை ஐபிஎல் விற்பனை உரிமத்தின் மூலமாக மட்டும் ஈட்டியது. ஆனால், ஒரு ரூபாய் கூட வரி செலுத்துவது இல்லை. பிசிசிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அரசு நிறுவனமும் இல்லை. பிறகு ஏன் அதற்கு வரி விலக்கு என்றால், அதை தொண்டு நிறுவனமாக பதிவு செய்து இருக்கிறார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு கிடைத்த வரி வருவாயில் 64 சதவீதம், அதாவது ரூ.14.83 லட்சம் கோடி தொகை 67 கோடி ஏழைகளால் வழங்கப்பட்டதாகும். 33% வரியை இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் செலுத்துகிறார்கள். கீழ் நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்களை விட 6 மடங்கு அதிகமாக மறைமுக வரி செலுத்துகின்றனர்.
இந்தியாவில் உள்ள 10 சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தில் 77 சதவீதம், அதாவது 660 பில்லியன் டாலர்களை தன் வசம் வைத்து உள்ளார்கள். ஆனால், வெறும் 3 சதவீதம் வரி மட்டுமே செலுத்துகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications