ஒரே போன் கால்.. ரஷ்யாவுக்கு குட்பை.. மொத்தமா மாறிடுச்சு! இந்தியா - அமெரிக்கா டீல் ஏற்பட்டது எப்படி?
டெல்லி: அமெரிக்கா இந்தியா மீதான வரியை 25% லிருந்து 18% ஆக குறைப்பதற்கான நடவடிக்கை, பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான தொலைபேசி உரையாடலை தொடர்ந்து இன்று உடனடி அறிவிப்பாக வெளியிடப்பட்டது. இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை விதித்ததால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்ததுமே, உடனடியாக 18% வரி அமல் செய்ய உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரியை பூஜ்ஜியம் ஆக்குவதாக உறுதியளித்ததன் அடிப்படையில் இந்த டீல் பரஸ்பரமாக அமலுக்கு வந்தது.

இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பதாவது, "இந்தியாவின் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய பிரதமர் மோடி, எனது சிறந்த நண்பர்களில் ஒருவரும்கூட.
வர்த்தகம், ரஷியா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்ட பல விஷயங்களையும் நாங்கள் பேசினோம். ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், வெனிசுவேலாவிருந்தும் அதிக எண்ணெய் வாங்கவும் அவர் ஒப்புக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் பலியாகும் நிலையில், போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாக, அவரது வேண்டுகோளின்பேரில், அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டோம். இதன்மூலம், பரஸ்பர வரியை 25 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. இதேபோல், இந்தியாவும் வரியைக் குறைக்கிறது.
மேலும், 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க எரிசக்தி, விவசாயம், நிலக்கரி உள்பட பல பொருள்களை வாங்குவதற்கும் பிரதமர் மோடி உறுதி கூறியுள்ளார். இந்தியாவுடனான நமது உறவு மென்மேலும் வலுவுடன் முன்னோக்கிச் செல்லும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்கா விதித்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மீட்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
2025 இறுதியில் இந்திய பட்ஜெட் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்றதும் பேச்சுகள் தொடங்கின. ரஷ்யாவில் இருந்து வாங்கும்எண்ணெய் குறைப்பு, அமெரிக்க பொருட்கள் வாங்குதல் பற்றி விவாதம் நடந்து வந்தது. இந்த நிலையில்தான், பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று பேசியுள்ளார்.
இதையடுத்து, இந்திய ஏற்றுமதிகள் மீதான பரஸ்பர வரியை அமெரிக்கா உடனடியாக 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது. அதற்கு ஈடாக, அமெரிக்க பொருட்களுக்கு எதிரான அதன் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளை நீக்குவதை நோக்கி நகர்வதற்கு இந்தியா ஒப்புக்கொண்டது. எதிர்காலத்தில் அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பிற பொருட்களை 500 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அமெரிக்க பொருட்களை வாங்கும் கொள்கைக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆற்றல், தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி, பால் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதால் அமெரிக்க உற்பத்தியாளர்கள் பெரும் சந்தை அணுகல் பெறுகின்றனர். இந்தியாவின் உயர் வரிகள் மற்றும் தடைகள் நீங்கி, அமெரிக்க விவசாய பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எளிதாக விற்கப்படும்.
இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தி அமெரிக்காவிடமிருந்து மாற்றாக வாங்குவதால் உக்ரைன் போருக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டுக்கு ஆதரவு கிடைக்கிறது. இந்தியாவை BRICS இலிருந்து பிரித்து அமெரிக்க கூட்டணியில் இணைத்து சீனாவின் செல்வாக்கை குறைக்கிறது.
-
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்












Click it and Unblock the Notifications