ஆயுஷ்மான் பாரத் கார்டு பெற எப்படி அப்ளை செய்ய வேண்டும்? 70 வயதை தாண்டிய அனைவருக்கும் காப்பீடு
டெல்லி: மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயதைக் கடந்த அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தனியாக சுமார் ரூ 5 லட்சம் காப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சுமார் 4.5 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள். இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்றால் என்ன.. இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நாம் பார்க்கலாம்.
கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மிக முக்கியமான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY). சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமாகக் கருதப்படும் இதில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 40% மக்கள் அதாவது 55 கோடி பேர் பயனடைவார்கள்.
எதற்காக: தேசிய சுகாதாரக் கொள்கை 2017இன் கீழ் அனைவருக்கும் மருத்துவ கவரேஜ் (UHC) இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா. ஏழை மக்களுக்குத் தேவையான சிகிச்சை சரியாகக் கிடைப்பதை இது உறுதி செய்கிறது.
இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் உறுதி செய்யப்படும். தொற்றாத நோய்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்கப்படும். அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நோயறிதல் சேவைகளும் இலவசமாகக் கிடைக்கும். மேலும், மருத்துவமனையில் அனுமதியாகும் போது குடும்பத்திற்கு ஆண்டுதோறும் ₹ 5 லட்சம் வரையிலான காப்பீடும் கிடைக்கும்.
யாருக்குக் காப்பீடு கிடைக்கும்: இந்தத் திட்டத்தில் தகுதி பெற சில குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.. எஸ்சி/ எஸ்டி பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் இத்திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள்.
கிராமப்புறத்தில் இருப்போரில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள், யாசகம் பெறுவோர், 16 முதல் 59 வயதுடைய நபர்கள் இல்லாத குடும்பங்கள், குறைந்தபட்சம் ஒரு மாற்றுத்திறனாளியைக் கொண்ட குடும்பம், தினசரி வேலை செய்யும் நிலமற்ற குடும்பங்கள், பழங்குடி சமூகங்கள், கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டோர், ஒற்றை அறை கொண்ட வீடுகளில் வாழும் குடும்பங்கள் உள்ளிட்ட பிரிவினர் இதில் தகுதி பெறுவார்கள்
நகர்ப்புறத்தில் வாழ்பவர்களில் 2011 சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பில் தொழிலாளர் பிரிவில் வந்த குடும்பங்கள், ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (RSBY) திட்டத்தில் பதிவு செய்துள்ள குடும்பங்கள் இதில் தகுதி பெறும்.
செக் செய்வது எப்படி: நீங்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றவரா என்பதை ஆன்லைனிலேயே செக் செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு Am I Eligible என்பதை கிளிக் செய்ய வேண்டும். மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை டைப் செய்து Generate OTP என்பதைக் கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபியை பதிவிடுங்கள். அதில் தேவையான தகவல்களைக் கொடுத்து சம்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.
இதற்கு எப்படி அப்ளை செய்ய வேண்டும்: நோய் வாய்ப்பட்ட நபரை அருகே உள்ள PMJAY kioskக்கு அழைத்துச் செல்லவும். உங்கள் ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டை ஆதாரமாக சமர்ப்பிக்கவும். நீங்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெறும் நபராக இருந்தால் அவர்களே AB-PMJAY ஐடியை தந்துவிடுவார்கள். அதை வைத்து நாம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications