டயட் இல்லாமல்... உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைக்கலாம்.. இதை பண்ணுங்க போதும்! ரொம்பவே ஈஸி தெரியுமா
எளிதாக எடையை எப்படிக் குறைக்கலாம் என்பது குறித்து ஆய்வாளர்கள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
டெல்லி: இப்போது பலரும் எடை குறைக்கக் கடுமையாக முயன்று வருகின்றனர்.. பலரும் எடையைக் குறைக்கக் கடுமையாகப் போராடி வரும் நிலையில், எளிதாக எடை குறைக்க உதவும் வழிகளை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
இந்த நவீனக் காலத்தில் மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல் பருமன் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது
குறிப்பாக அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக உடல் பருமன் காரணமாக அங்கு முந்தைய தலைமுறையைக் காட்டிலும் இந்த தலைமுறையின் ஆயுட்காலம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிய வந்துள்ளது. இது உலக நாடுகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

உடல் எடை
ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல் எடை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எடை குறைப்பு என்பது ஒரு நீண்ட கால சிக்கலான பயணமாகும்.. எடை குறைக்க சில ஆண்டுகள் வரையிலும் கூட ஆகலாம். எடையைக் குறைக்கக் கடுமையான டயர்ட், ஜிம்மிக்கு சென்று மணிக் கணக்கில் எக்சர்சைஸ் என்று பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருக்கும். இப்படி எடை குறைக்கப் பலரும் பல வழிகளை தேர்வு செய்வார்கள்..

ஈஸியாக குறைக்கலாம்
மேலும், எடை குறைப்பு தொடர்பாகவும் உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே உடல் எடை குறைப்பை வேகப்படுத்தும் வழிமுறையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் உடல் எடை குறைப்பை 94% வரை வேகப்படுத்த முடியும். இந்த எளிய முறையைப் பின்பற்றினால்.. மிக வேகமாக எடையைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்காக, பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள், 14 வாரங்களுக்கு இரு பிரிவுகளாக மக்களைப் பிரித்துக் கண்காணித்துள்ளனர்.

கடைசி சாப்பாடு
அதில் உணவைக் காட்டிலும் உணவை நாம் எடுத்துக் கொள்ளும் நேரமே முக்கியமானது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நேரம் என்றவுடன் வேகமாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. மாறாக, அனைத்து நாட்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் நாம் உணவைச் சாப்பிட்டாக வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் நமது ரத்த அழுத்தம் குறைகிறது. புத்துணர்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால், இதில் இருக்கும் ஒரே கஷ்டமான விஷயம் என்றால், நாம் அந்த நாளின் கடைசி உணவை மதியம் 3 மணிக்கே எடுத்தாக வேண்டும். அதன் பிறகு எதையும் சாப்பிடக் கூடாது.

எப்போது சாப்பிடலாம்
இதனை intermittent fasting என்று ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள்.. இந்த நேரக் கட்டுப்பாட்டுடன் சாப்பிடுவது எடை இழப்பு தொடங்கி புத்துணர்ச்சி வரை பல நன்மைகளைத் தருகிறது.. இந்த முறையில் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய இடைவெளியில் தொடர்ந்து சாப்பிட வேண்டும். அதேநேரம் மற்ற நேரத்தில் சாப்பிடவே கூடாது. இதில் 16:8 முறை ரொம்ப பிரபலம். அதாவது 8 மணி நேரம் சாப்பிட்டுவிட்டு அடுத்த 16 மணி நேரம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இதில் பெரும்பாலானோர் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை சாப்பிடுவார்கள். 3 மணிக்கு மேல் சாப்பிட மாட்டார்கள்..

எதற்காகத் தெரியுமா
நமது உடல் சர்க்காடியன் ரிதம் அடிப்படையில் செயல்படுகிறது. தூக்கம், கண் விழிப்பது, உணவு மற்றும் வளர்ச்சி என்று அனைத்திற்கும் இது காரணமாக இருக்கிறது. ஆயுர்வேதத்திலும் கூட சூரிய உதயத்திற்குப் பின்னரே வளர்ச்சி வேகமாக உள்ளதாகவும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அது குறைகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, கொழுப்பை எரிக்கும் வேலையில் உடல் உச்சத்தில் இருக்கும் நேரத்திலேயே நாம் சாப்பிட்டு விட வேண்டும் என்பதையே இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உடல் பருமன்
இந்த ஆய்வுக்காக, உடல் பருமன் அதிகம் உள்ள 90 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் பாதிப் பேர் 14 வாரங்களுக்கு இந்த intermittent fasting முறையைப் பின்பற்றியுள்ளனர். இரண்டு குழுவும் ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டு,, வாரத்திற்கு 150 நிமிடங்களுக்குக் கடுமையான உடற்பயிற்சி செய்துள்ளனர். இதில் இந்த உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் அதிக எடையை இழந்துள்ளனர்.. இந்த டயர்ட் பாலோ செய்யாதவர்கள் 4.5 கிலோ குறைந்துள்ள நிலையில், டயர்ட் பாலோ செய்பவர்கள் 7 கிலோ வரை குறைந்துள்ளனர்.. இது 214 கலோரிகளை குறைப்பதற்குச் சமமாகும்.

16 மணி நேரம்
இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள்.. நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்க இது பெரியளவில் உதவியாக இருக்கும். இருப்பினும், தொடக்கத்தில் இது பலருக்கும் சவாலானதாக இருக்கும், ஏனெனில் சுமார் 16 மணி நேரம் வரை உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதால் பலருக்கும் இடையே பசி ஏற்படும். நாள் முழுவதும் குறைவான கலோரிகளை உண்பதற்கு மாறாக, நேரக் கட்டுப்பாட்டுடன் சாப்பிடுவது எடை இழப்புக்கான சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த முறை பலருக்கும் கடினமானதாக இருக்கும் என்பதால் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு அதற்கேற்ப டயட் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications