கூகுள்பே, போன்பே-ல் தப்பான நம்பருக்கு பணம் அனுப்பிட்டீங்களா..டென்ஷன் வேண்டாம்..இதை மட்டும் செய்யுங்க
டெல்லி: யுபிஐ முறையில் பணம் அனுப்பும் போது எதிர்பாராத விதமாகத் தவறான நபருக்குப் பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி பலருக்கும் வரும்.. ஆனால் கவலை வேண்டாம். இதுபோல தவறான நபருக்குப் பணம் அனுப்பினால் என்ன செய்ய வேண்டும்.. பணத்தைத் திரும்பப் பெற என்ன வழிமுறை இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்த டிஜிட்டல் காலத்தில் பொதுமக்கள் பலரும் யுபிஐ மூலமாகவே பணத்தை அனுப்புகிறார்கள். யுபிஐ என்றால் என்ன எனக் குழம்ப வேண்டாம்.. ஜிபே, போன்பே ஆகியவை இந்த யுபிஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான் இயங்குகிறது.

கார்டுகளில் பணம் செலுத்தினால் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக செலுத்த வேண்டும். ஆனால், யுபிஐயில் வாடிக்கையாளர் மட்டுமின்றி கடைக்காரரும் எந்தவொரு கமிஷனும் செலுத்தத் தேவையில்லை. இதனால் பலரும் இந்த யுபிஐயை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
யுபிஐ இருந்தால் போதும்: இதை யூஸ் செய்ய இணைய வசதியுடன் கூடிய ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நேரடியாக ஒருவரது வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பலாம்.. கமிஷன் இல்லை, நொடிகளில் பணம் அனுப்ப முடிகிறது, சில்லறை பிரச்சினை எனப் பல காரணங்களால் இந்த யுபிஐ முறையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
"இனி நிற்காது.." ராக்கெட்டில் ஏறிடுச்சு தங்கம் விலை.. எவ்வளவு அதிகரிக்கும்?.ஆனந்த் சீனிவாசன் நறுக்
மேலும், இதன் கீழ் ஒருவர் மொபைல் எண் மூலமாகவும் பணம் அனுப்பலாம்.. அல்லது QR கோட் மூலமாகவும் பணத்தை அனுப்பலாம்.. QR கோட் பணம் அனுப்பினால் எந்த பிரச்சினையும் வராது. ஸ்கேன் செய்தாலே போதும் யாருக்குப் பணம் அனுப்புகிறோம் என்பது குறித்த தகவல்கள் வரும். அதை செக் செய்துவிட்டு பணத்தை அனுப்பிவிடலாம். அதேநேரம் நம்பர் மூலம் பணம் அனுப்பும் போது அது வேறு யாருக்காவது சென்றுவிட வாய்ப்புகள் உள்ளன.
ரிவர்ஸ் செய்ய முடியாது: மற்ற முறைகளைப் போலவே யுபிஐ முறையில் நீங்கள் பணத்தை அனுப்பிவிட்டால் அதை ரிவர்ஸ் செய்ய முடியாது. இதனால் தவறான நபருக்குப் பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் கேள்வியாகவே இருக்கிறது. ஆனால், கவலை வேண்டாம்.. தவறான நபருக்குப் பணம் அனுப்பினாலும் அதைத் திரும்பப் பெற சில வழிகள் இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன செய்ய வேண்டும்: முதலில் யாருக்குத் தவறாகப் பணம் அனுப்பிவிட்டீர்களோ.. அவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்கலாம். பெரும்பாலான செயலிகளில் சாட் ஆப்ஷன் இருக்கிறது. அதை வைத்து நீங்கள் பணம் கேட்கலாம். பெரும்பாலானோர் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். இருப்பினும், சிலர் பணத்தைத் தராமல் இழுத்தடிப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் நீங்கள் செயலியில் உள்ள சப்போர்ட் செக்ஷனை தொடர்பு கொள்ளலாம்.
அதாவது நீங்கள் கூகுள் பே பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதிலேயே சப்போர்ட் செக்ஷன் இருக்கும். அதில் என்ன நடந்தது என்பதை விளக்கி, தவறான எண்ணுக்குத் தற்செயலாகப் பணம் அனுப்பிவிட்டதை விளக்கி கம்ப்ளைன்ட் தரலாம். கூகுள்பே மட்டுமின்றி, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட அனைத்து யுபிஐ செயலிகளிலும் இதை நடைமுறை தான். உங்கள் பிரச்சினையை விளக்கி, கோரிக்கை விடுக்கலாம்.
போர்டலில் புகார்: இருப்பினும், இதில் உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் நேரடியாக NPCI போர்ட்டலிலும் புகார் அளிக்கலாம். இதற்காக நீங்கள் NPCI அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் What we do Tab' என்பதை கிளிக் செய்து அதில் UPI என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதில் Dispute Redressal Mechanism கீழ் பரிவர்த்தனை ஐடி, விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் உட்பட அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் ஃபில் செய்யவும். புகாருக்கான காரணம் என்பதில் Incorrectly transferred to another account என்பதைத் தேர்வு செய்து புகாரளிக்கவும்.
வங்கியிடம் புகார்: அதன் பின்னரும் புகார் தீர்க்கப்படவில்லை என்றால் வங்கியிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம். பெரும்பாலான புகார்களுக்கு இந்த மேலே சொன்ன முறைகளிலேயே தீர்வு கிடைத்துவிடும். ஒரு வேளை உங்களுக்கு இது எதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அடுத்து வங்கி குறைதீர்ப்பாளர் அல்லது டிஜிட்டல் புகார்களுக்கான குறைதீர்ப்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும். 30 நாட்களுக்கு பிறகே இவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்..
இதைச் செய்தால் போதும்: சும்மா ஒரு வெற்று பேப்பரில் உங்களது புகாரை நீங்கள் எழுதி அளிக்கலாம். ஒம்புட்ஸ்மேன் அலுவலகத்திற்குத் தபால்/ பார்சல் அல்லது நேரில் சென்று கூட புகாரளிக்கலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் புகாரை அனுப்பலாம். இதற்கு முன்பு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதை விளக்கி, அதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இதைச் செய்தால் போதும் உங்கள் பணம் உங்களுக்கே வந்துவிடும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications