"இனி நிற்காது.." ராக்கெட்டில் ஏறிடுச்சு தங்கம் விலை.. எவ்வளவு அதிகரிக்கும்?.ஆனந்த் சீனிவாசன் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாகப் பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அது ஏறுமுகத்தில் இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை இப்படி திடீரென அதிகரிக்க என்ன காரணம்.. இது எந்தளவுக்கு உயரும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

தங்கம் விலை சில காலமாகவே பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கிராமுக்கு 65 ரூபாய் வரை தங்கம் விலை அதிகரித்துள்ளது.

Anand Srinivasan gold personal finance

அதற்கு முன்பு சில நாட்கள் குறைந்ததைக் காட்டிலும் ஒரே அடியாகத் தங்கம் விலை அதிகரித்துவிட்டது. இப்படி திடீரென தங்கம் விலை அதிகரிக்க என்ன காரணம் என்பது பலருக்கும் புரியாமல் இருந்தது.

தங்கம் விலை: இதற்கிடையே இதற்கான காரணத்தைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். ஆபத்தான காலத்தில் தங்கத்தைப் போல வேறு எதுவும் உதவாது என்பதைத் தொடர்ந்து கூறி வருபவரே ஆனந்த் சீனிவாசன். அவர் தனது சமீபத்திய வீடியோவில் தங்கம் விலை இந்தளவுக்கு உயர என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன.. எத்தனை காலம் உயரும்.. எவ்வளவு தூரம் உயரும் என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "தங்கம் விலை குப்புனு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சற்று குறைந்ததை கூட ஒரே நாளில் ஏற்றிவிட்டார்கள். அமெரிக்க மத்திய வங்கி கவர்னர் ஜெரோம் பவல் கூறிய கருத்தை இதற்கு முக்கிய காரணமாகும்.

பணவீக்கம்: பணவீக்கம் எதிர்பார்த்ததை போலக் குறைய ஆரம்பித்துவிட்டதாக அவர் சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் வட்டி விகிதத்தைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். வரும் செப். மாதம் அல்லது டிசம்பர் மாதம் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஜெரோம் பவல் தெரிவித்திருந்தார்.

செப். மாதம் வட்டி குறைப்பு வராது என்றே பலரும் நினைத்தனர். ஆனால், ஜெரோம் பவல் கூறியதைப் பார்த்தால் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்றே தெரிகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விற்கப்படுவது தொடர்ந்தாலும், வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற தகவலால் தங்கம் விலை ராக்கெட்டில் ஏறிவிட்டது. அது எந்தளவுக்குச் செல்லப் போகிறது என்பதை 24 மாதம் கழித்தே சொல்ல முடியும்" என்று கூறியுள்ளார்.

நேரடி தொடர்பு இருக்கு: அமெரிக்க மத்திய வங்கிக்கும் தங்கம் விலைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அங்கு வட்டி விகிதம் இத்தனை காலம் அதிகரிக்கப்பட்டதால் தங்கம் விலை பெரியளவில் உயராமல் இருந்தது. இடையில் உக்ரைன் விவகாரம், இஸ்ரேல்- காசா போரால் தங்கம் விலை சற்று உயர்ந்தாலும் பெரியளவில் உயரவில்லை. அதேநேரம் அங்கு வட்டி விகிதம் குறைக்கப்பட ஆரம்பித்தால் தங்கம் விலை புதிய உச்சம் தொடும் என்பதே ஆனந்த் சீனிவாசனின் கருத்தாக இருக்கிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+