இதை செய்யுங்கள்போதும்! பெண்களை ஈஸியா இம்ப்ரஸ் செய்யலாம்! கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விக்கான விடை
டெல்லி: பெண்களை எப்படி இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்பதே இப்போது பெரும்பாலான இளைஞர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. இதற்கான விடை தெரியாமல் தான் இளைஞர்கள் பலரும் குழம்பி விடுகிறார்கள்.
பல நேரங்களில் இளைஞர்கள் இந்த விஷயத்தில் தான் சொதப்பி விடுகின்றனர். என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவறான விஷயங்களை கரெக்டாக செய்து சொதப்பும் சம்பவங்களையும் நாம் பார்த்து இருப்போம்.
இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் பெண்களை எப்படி இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் கூகுளில் அதிகம் தேடுகின்றனர். ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்களை மறக்காமல் ஃபாலோ செய்தால் பெண்களை இம்ப்ரஸ் செய்வது ரொம்பவே ஈசியாம். அப்படி என்ன தான் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க!

நகைச்சுவை முக்கியம் தான் ஆனால்
உரையாடலின் போது ஆண்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்பதை எந்தவொரு பெண்ணும் முக்கியமாக நோட் செய்வார்களாம். உரையாடலின் போது பெண்கள் கவனிக்கும் முக்கிய விஷயம் நகைச்சுவை உணர்வு! எனவே உரையாடலின் போது பெண்ணை சிரிக்க வைக்க முயலுங்கள். அதேநேரம் சீரியஸான பேச்சுகளும் முக்கியம். இந்த இரண்டிற்கும் இடையே சமமான பேலன்ஸ் வேண்டுமாம். அப்போது தான் பெண்கள் பேச அதிக ஆர்வம் காட்டுவார்கள். பெண்களுடன் பேசும் போது சோகமாக இருக்காதீர்கள்.

மரியாதை
ஆண்கள் பெண்கள் என அனைவரும் தாங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். எந்தவொரு பெண்ணும் தனது துணையிடம் இந்த குணத்தைக் கண்டிப்பாக எதிர்பார்ப்பார். ஒரு ஆண் பெண்ணுக்கு எந்தளவு மரியாதை கொடுக்கிறான் என்பது மிகவும் முக்கியம். எனவே பெண்ணை இம்பரஸ் செய்ய வேண்டும் என்றால் முதலில் மரியாதை கொடுங்கள். பெண்களை மதிக்கும் ஆண்களைப் பெண்கள் பெரும்பாலும் விரும்புவதற்கு இதுவே காரணம்.

நம்பிக்கை வேண்டும்
நம்பிக்கை உடன் இருக்கும் ஆண்களைத் தான் பெண்களுக்குப் பிடிக்கும். எந்தவொரு வேலையையும் நம்பிக்கை உடன் செய்யுங்கள். தன்னம்பிக்கையுள்ள ஆண்களைத் தான் பெண்கள் விரும்புவார்கள். பெண்கள் பதற்றமாகப் பேசும் போது, அவர்கள் ஆசுவாசப்படுத்தி நம்பிக்கை கொடுங்கள். அதேநேரம் அதீத நம்பிக்கை ஆபத்தானது. நம்பிக்கையுடன் பேசுவது, முடிவு எடுக்கும் தன்மையில் உறுதி காட்டுவது முக்கியமானது.

உடை
பெரும்பாலான ஆண்கள் கோட்டைவிடுவது இந்த இடத்தில் தான். பெண்களை இம்ப்ரஸ் செய்யும் போது நல்ல உடையும் உடலைச் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். அதற்காக ஃபேஷன் ஃப்ரீக்காக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் எதை அணிந்தாலும் தன்னம்பிக்கையோடும் நீட்டாகவும் இருக்க வேண்டும் எனப் பெண்கள் விரும்புவார்கள். அதேபோல உங்கள் சுகாதாரத்தையும் பெண்கள் நோட் செய்வார்கள். எனவே முடி, தாடி மற்றும் நகங்களைக் கொஞ்சம் சுத்தமாக வைத்து இருங்கள், வியர்வை ஸ்மெல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிகம் கவனியுங்கள்
பெண்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். பெண்கள் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயக்கம் காட்டுவார்கள் சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களை கவலைக்குள்ளாக்கும். இதன் காரணமாகவே பார்ட்னரிடம் பெண்கள் அதிகம் பேசுவார்கள். அதுபோன்ற நேரங்களில் பெண்கள் பேசுவதைக் கவனமாகக் கேளுங்கள். பெண்கள் சொல்வது பிடிக்கிறதோ இல்லையோ அமைதியாகக் கேட்டாலே போதும். அவருக்குப் பிடித்தமானவராக மாறலாம்.

சாப்பாடு
பெண்களுக்கு சாப்பாடு மிகவும் பிடிக்கும். அவர்கள் பல்வேறு வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, சுவையான உணவுகளை அவர்களுக்குக் கொடுத்தால் அது அவர்களின் இதயத்தில் இடம் பிடிக்க உதவும். பெண்களுக்கு எந்த உணவு பிடிக்கும் என்பதைக் கவனத்து அதை வாங்கிக் கொடுங்கள். அதுவும் பெண்கள் கோபமாக இருக்கும் போது, உணவே அவர்களை சமாதானம் செய்ய உதவும்.












Click it and Unblock the Notifications