"தலை"க்கு தில்ல பார்த்தீங்களா.. "அதே இடம்".. கிளம்பி வர்றார் ராகுல் காந்தி.. மலைக்கும் கர்நாடக பாஜக
டெல்லி: கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.. அந்தவகையில், காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.. அதிலும், ராகுல் காந்தி அடுத்த மாதம் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.. எங்கு தெரியுமா?
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு அவர் பேசியிருந்தது மிகுந்த சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
திருடர்களின் பெயர்கள் எல்லாம் ஏன் மோடி என்றே முடிகிறது? என்று ராகுல் கேட்டதுதான், இந்த விவகாரம் முற்றியதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

அதிர்ந்த கதர்கள்
இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக சூரத் கோர்ட்டில், கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது... இந்த வழக்கை பாஜக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறைத்தண்டனை விதித்தது... எனினும், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு, ஜாமீன் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து நாடாளுமன்ற மக்களவை செயலகம் தண்டனையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறிப்பதாக அறிவித்தது.. இதனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியை அடைந்தனர்.. உடனடியாக கண்டன பதிவுகளையும் பதிவு செய்தனர்..

நிச்சயம் நடப்பேன்
அப்போது முதல், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை கையில் எடுத்து, அதை நடத்தியும் வருகின்றனர். இதனிடையே, ராகுல் காந்தி டெல்லியில் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது... இதற்கு ராகுல் காந்தியே ஒரு பதிலையும் அளித்திருந்தார்.. அதில், "எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை ரத்து செய்து கடிதம் அனுப்பியதற்காக தங்களுக்கு நன்றி... பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் கடந்த 4 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை இதில் செலவிட்டேன்... என்னுடைய உரிமைகளுக்கு எவ்விதமான தீங்கும் ஏற்படாமல் தங்களது கடிதத்தில் அடங்கிய விவரங்களின்படி நிச்சயம் நடப்பேன்'' என்று தெரிவித்திருந்தார்.

லிஸ்ட் போட்டாச்சு
இந்நிலையில்தான், கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சி அங்கு தனித்து போட்டியிடுகிறது... எப்படியாவது இந்த முறை கர்நாடகத்தில் ஆட்சி அமைந்துவிட வேண்டும் என்பதிலும் முனைப்புகளை காட்டி வருகிறது.. அதனால்தான், தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கியது.. அந்தவகையில், ராகுல் காந்தி அடுத்த மாதம் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

அதே இடம்
எங்கு தெரியுமா? கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து பேசி சலசலப்பை ஏற்படுத்திய அதே கோலார் பகுதியில்தான், அடுத்த மாதம் 5ம் தேதி முதல் பிரச்சார கூட்டத்தை நடத்துகிறார்.. அதே மாநிலத்தில், அதே இடத்தில், இந்த முறையும் பிரச்சாரம் நடப்பதால், ராகுல் காந்தி என்ன பேசப்போகிறார்? ஆளுங்கட்சிக்கு எதிரான அவரது அஸ்திரம் என்ன? என்கிற எதிர்பார்ப்புகள் எகிறி கொண்டிருக்கின்றன.. அதேபோல ராகுலின் இந்த பிரச்சாரத்தை பாஜக முறியடிக்க போகிறது என்கிற ஆர்வமும் கிளம்பி உள்ளது.. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 2018ம் வருடம் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. ஆனால் ஒரே வருடத்தில் அந்த ஆட்சி கலைக்கப்பட்டு, பாஜக ஆட்சியைப் பிடித்தது.

ஹாட் பாஜக
ஆட்சிக்கவிழ்ப்புக்கு பாஜகவே காரணம் என்று காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் குற்றம்சாட்டிய நிலையில், இந்த முறை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.. காரணம், கடந்த முறையைவிட, இந்த முறை ராகுல் காந்தியின் அரசியலும், அவர் முன்னெடுத்து வரும் வியூகங்களும், மக்களை கவர்ந்து வருகின்றன.. குறிப்பாக, அவரது யாத்திரை மிகுந்த வெற்றியை பெற்றுவிட்டதாக காங்கிரஸ் தொண்டர்கள் பூரித்துள்ள நிலையில், இதுவும் பாஜகவுக்கு எரிச்சலை தந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ்
எனவே, 5ம்தேதி ராகுல் என்ன பேசப்போகிறார் என்பது குறித்து இப்போதே ஆர்வம் எழுந்துள்ளது. இந்தசூழலில், நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.. மக்களவை செயலகத்தின் துணைச்செயலாளர் மோகித் ராஜனுக்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார். அதில், அன்புள்ள ராகுல் காந்தியே, இந்த நாட்டை கொடுங்கோலர்களிடம் இருந்து காப்பாற்ற விரும்பும் ஒவ்வொருவரின் இல்லமும் உங்கள் வீடு தான். இந்தியாவே உங்கள் வீடு தான். உங்களுக்கான ஆற்றல் அதிகம். நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்'' என்று பதிவிட்டுள்ளது, காங்கிரஸ் கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications