Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தே பாரத் எல்லாம் பழசு! சென்னையில் வரும் ஹைட்ரஜன் செல் ரயில்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! செம மாஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வந்தே பாரத் ரயில்களுக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்து சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வரும் கலக்கல் மேட்டர் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நமது நாட்டில் மிக முக்கியமான ஒரு பொது போக்குவரத்து என்றால் ரயில்களைச் சொல்லலாம். நமது நாட்டில் எந்தவொரு முக்கிய நகரத்திற்கும் எளிதாக ரயில்கள் மூலம் சென்றடையலாம்., கட்டணம் தொடங்கிப் பல காரணங்களால் ரயில்களையே மக்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள்.

Hydrogen-Powered Trains will be produced in Chennai Integral Coach Factory assure minister Ashwini Vaishnaw

இருப்பினும், இந்திய ரயில்கள் பழமையானதாக இருப்பதாக நீண்ட காலமாகவே புகார்கள் இருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தியன் ரயில்வே வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தின.

வந்தே பாரத்: முழுக்க ஏசி, தானியங்கி கதவுகள் எனப் பல கலக்கல் வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தன. இப்போது நாடு முழுக்க பல்வேறு ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இந்தியன் ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்தும் திட்டமும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

நாட்டு மக்களுக்கு ரொம்பவே விருப்பமான ரயில்களாக மாறிய இந்த வந்தே பாரத் பெரும்பாலும் சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் வந்தே பாரத் ரயில்களை அதிகரிக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வரும் கலக்கல் மேட்டர் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹைட்ரஜன் ரயில்: லோக்சபாவில் பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார். குறிப்பாக ஹைட்ரஜன் ப்யூயல் செல் தொழில்நுட்பத்தில் (Hydrogen Fuel Cell technology) இயங்கும் ரயிலை உருவாக்குவதில் இந்திய ரயில்வே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரயில் போக்குவரத்தில் ஹைட்ரஜன் செல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். வந்தே பாரத் ரயில்களைப் போலவே இந்த ஹைட்ரஜன் செல் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில்களும் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை: இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இந்தியன் ரயில்வே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்கும் ரயில்களை இயக்கும் திட்டத்தை வைத்துள்ளது. எனவே, ஹைட்ரஜன் செல்களில் இயங்கும் ரயில் திட்டம், நமது ரயில்வே துறைக்கு முக்கியமானதாக இருக்கும். ஹைட்ரஜன் செல் மூலம் கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு இயங்கும் இந்த ஹைட்ரஜன் ரயில்களைச் சோதனை முறையில் உருவாக்கி இருக்கிறோம்.

இந்த ரயில்களைச் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப், தொழிற்சாலையில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயில்களைச் சிறப்பாக இயக்க முடியும் என்பதை இது நமக்குக் காட்டும்" என்று அவர் தெரிவித்தார்.

கார்பன் எமிஷன்: இந்திய ரயில்வே 2030ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தை அடைய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக இந்தியன் ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்களின் மின்சார தேவையைக் குறைக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

மேலும், ரயில்வே கட்டிடங்கள் தொடங்கி ரயில் பெட்டிகள் வரை அனைத்திலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் மரங்கள் நட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+