Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி போராட்டம்.. அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.. அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!

டெல்லியில் நடக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து விதமான முயற்சிகளும் செய்து வருகிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து விதமான முயற்சிகளும் செய்து வருகிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியிலும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

I am doing everything in my side to stop protest says Delhi CM Kejriwal on protest against CAB

அங்கு இருக்கும் மாணவிகள் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தற்போது கலவரத்தில் முடிந்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு வெளியே 3 பேருந்துகளை மர்ம நபர்கள் எரித்துள்ளனர். இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், டெல்லியில் நடக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து விதமான முயற்சிகளும் செய்து வருகிறேன். அமைதியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை கொண்டு வருகிறேன்.

துணை நிலை ஆளுநரிடம் இது தொடர்பாக பேசியுள்ளேன். இந்த கலவரத்தை உருவாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். உண்மையாக கலவரத்தை உருவாக்கிய நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று, அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+