"நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!" சொல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.. எதற்காக தெரியுமா
டெல்லி: செங்கோட்டையில் குரு தேஜ்பகதூரின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியா குருக்களின் கருத்துகளையே பின்பற்றி நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
குரு தேஜ்பகதூரின் 400வது பிறந்த நாளையொட்டி டெல்லி செங்கோட்டையில் சிறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரதமர் மோடி சிறப்பு நாணயம், தபால் தலையை வெளியிட்டார்.
இதன் காரணமாக அங்கு 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும், செங்கோட்டையை சுற்றிப் பல அடக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் டெல்லியில் சீக்கிய மத குரு தேஜ்பகதூர் உருவம் பதித்த ரூ.400 நாணயம், சிறப்புத் தபால் தலையைப் பிரதமர் மோடி வெளியிட்டார். அதன் பின்னர் பேசிய நரேந்திர மோடி, "குரு தேக் பகதூரின் 400வது பிறந்தநாளின் பிரமாண்டமான கொண்டாட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
நமது குருக்களின் பேச்சைக் கேட்கும் போது நான் நிம்மதி அடைந்தேன். இப்போது இந்தியா நமது குருக்களின் பாதையைப் பின்பற்றி நடப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக இந்தியர்கள் பல தியாகங்களைச் செய்துள்ளனர். இந்தியாவை அதன் மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்கள் இல்லாமல் பார்க்க முடியாது. இங்கு இந்தியாவில் பேரரசுகள் எழுந்தன. வீழ்ந்தன. ஆனால், இந்தியா எப்போதுமே வலுவாக நின்றது. இந்தியா எப்போதும் தொடர்ச்சியாக முன்னேறியே வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைவரது கடமை.
குரு நானக் தேவ் முழு நாட்டையும் ஒன்றிணைத்தார். குரு தேக் பகதூரைப் பின்பற்றுபவர்கள் எல்லா இடங்களிலும் இருந்தனர். பாட்னாவில் பாட்னா சாஹிப் மற்றும் டெல்லியில் ராகப்கஞ்ச் சாஹிப், குருவின் ஞானம் மற்றும் ஆசீர்வாதத்தின் வடிவத்தில் ஒரே பாரம் என்ற கனவை நாம் பார்க்கிறோம்," என்று பிரதமர் கூறினார்.












Click it and Unblock the Notifications