Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது என்ன மோடி.. தப்பு.. நரேந்தர் என்றுதான் அழைக்கப்போகிறேன்.. திமுக எம்.பி. செந்தில்குமார் ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமரை மோடி என்கிற ஜாதி பெயருடன் சேர்த்து அழைக்காமல் நரேந்தர் என்று மட்டும்தான் அழைப்பேன் என திமுக எம்பி செந்தில்குமார் லோக்சபாவில் பேசியிருப்பது விவாதத்துக்குரியதாகி உள்ளது.

சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் எம்.பி.க்களில் திமுவின் செந்தில்குமாரும் ஒருவர். திராவிட இயக்க கொள்கைகளின் அடிப்படையில் கொள்கை எதிரிகளுக்கு பதிலடி தரக் கூடியவர்.

டாக்டரான செந்தில்குமார் எம்பி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே ஆலாபுரம் ஏரியை சீரமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை விவகாரத்தில் அதிகம் பேசப்பட்டார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் அர்ச்சகரை வைத்து இந்து மத முறைப்படி பூஜை செய்ய திட்டமிடப்பட்டிருந்தனர். இதனை கடுமையாக எதிர்த்தார் செந்தில்குமார் எம்பி.

இந்து மத பூஜைகள் எதிர்ப்பு

இந்து மத பூஜைகள் எதிர்ப்பு

அத்துடன் இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை இது. கிறிஸ்டியன் பாதர் எங்கே? இஸ்லாம் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இப்படி நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி. இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களை கொண்டு நடத்துங்கள். ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக்கூடாது எனவும் கொந்தளித்தார் செந்தில்குமார். அவரது இந்த பேச்சும் வீடியோவும் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்களைக் கிளப்பிவிட்டது.

பாராட்டிய தாய்க் கழகம்

பாராட்டிய தாய்க் கழகம்

ஒரு எம்.பி.யாக இருந்து கொண்டு இப்படி பகுத்தறிவு அடிப்படையில், மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறார் என்பதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் பாராட்டி இருந்தார். அரசமைப்புச் சட்டத்தின் 'செக்யூலர்' (Secular) என்ற மதச்சார்பின்மை தத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவையே! அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில், தி.மு.க. ஆட்சியில் இப்படி ஏதும் நடக்க அவர்கள் அனுமதித்தது கிடையாது. 'மதச்சார்பற்ற' என்றால், ''அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுதல்'' என்ற ஒரு தவறான வியாக்கியானம் நமது அரசியல்வாதிகளிடையே புழக்கத்திற்கு விடப்பட்டதே - அடிப்படையில் அது நியாயமல்ல - திரிபுவாத விளக்கம் ஆகும்!
இதன்படி பார்த்தால்கூட, அரசு அடிக்கல் நாட்டுவிழாவில், அனைத்து மதத்தினர், மற்றவர் அனைவரையும்தானே அழைத்திருக்கவேண்டும்; வெறும் ஒரு மத (ஹிந்து சனாதன)ச் சடங்கு - அதுவும் நடத்தப்படவேண்டிய அவசியம் என்ன என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் அவர்கள் கேள்வி எழுப்பியது மிகவும் சரியானது எனவும் கூறியிருந்தார் கி.வீரமணி.

பூமி பூஜை பெயருக்கும் எதிர்ப்பு

பூமி பூஜை பெயருக்கும் எதிர்ப்பு

சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற நிகழ்ச்சியின் பெயர் பூமி பூஜை என போடப்பட்டிருந்தது. அதற்கும் செந்தில்குமார் எம்பி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதாவது, கரூர் மாநகராட்சி பார்வைக்கு- இந்தியா ஓர் #மதச்சார்பற்ற_நாடு என்று நமது அரசியல் அமைப்பு சட்டம் உள்ள காரணத்தினால் கரூர் இந்தியாவில் அமைந்துள்ள ஓர் மாநகராட்சி என்ற அடிப்படையில் அந்த நிகழ்ச்சிக்கு பெயர் #அடிகல்_நாட்டு_விழா அல்லது பணிகள் துவங்கும் விழா Ground breaking ceremony" என தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நரேந்தர் தான்.. நரேந்தர மோடி அல்ல

நரேந்தர் தான்.. நரேந்தர மோடி அல்ல

தற்போது லோக்சபாவில் செந்தில்குமார் பேசிய பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. லோக்சபாவில் பேசிய செந்தில்குமார் எம்பி, மனிதர்கள் மற்றவர்களை மனிதநேயத்தை வைத்து மட்டுமே மதிக்க வேண்டும். ஜாதிய அடையாளப் பெயர் வைத்து மனிதர்களை மதிக்கக் கூடாது. நாட்டின் பிரதமரை நரேந்தர் என்றுதான் அழைப்பேன். அவரது ஜாதி பெயரான மோடி என்ற பெயருடன் அழைக்க மாட்டேன் என கூறியிருந்தார். செந்தில்குமார் எம்பியின் இந்தப் பேச்சும் விவாதத்துக்குரியதாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+